பிரபல நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமி இருவரும் தங்களது வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைவித்து வருகின்றனனர். அதே சமயம் மாடித்தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்து யூடியூப் வீடியோ மூல்ம் பலருக்கும் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
இன்றைய காலட்டத்தில் பலரும் நோய் தொற்றுக்கு ஆளாவதற்கு உணவு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆரோக்கியமற்ற உணவு எப்போதமே நமக்கு தீங்கு விளைவிக்கும். அதேபோல் காய்கறிகள் சத்தானதா என்றால் அதற்கும் ஆம் என்று சொல்லும் அளவுக்கு எந்த காய்கறி இயற்கை முறையில் வளர்க்கப்பட்டது. எது செயற்கையாக தயாரிக்கப்பட்ட விதையில் இருந்து வந்தது என்பதை கண்டறிவது பெரும் பாடாக இருக்கும்.
இந்த நிலையை சமாளிக்கலே விவசாயிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே விளைவித்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு இது சாத்தியமாகும். ஆனால் நகரத்தில் உளள மக்களுக்கு இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டால் மாடித்தோட்டம் என்ற ஒரு முறையின் மூலம் நமக்கு தேவையான காயகறிகளை நாமே விளைவித்துக்கொள்ளலாம்.
இது தொடர்பாக சமூக வளைதங்களில் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், மற்றும் மாடித்தோட்டம் வைத்திருப்பவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் வீடியோக்களாக பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ மற்றும் மாடித்தோட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொண்டு பலரும் தங்களது வீடுகளில் இந்த மாடித்தோட்ட முறைகளில் காய்களிகளை பயிரிட்டு வருகின்றனர்.
மேலும் தங்களது மாடித்தொட்டத்தில் பயிரிட்டுள்ள காய்கறிகள் பறிக்கும்போது, அவை காய்த்து குலுங்கும்போது வீடியோக்களை வெளியிட்டு பலரின் ஆர்வத்தை தூண்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.இதில், எலுமிச்சம்பழம் காய்ந்து தொங்குவதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
இந்த எலுமிச்சம்பழம் பெரிய ஜாதி என்றும், ஊறுகாய் போடுவதற்கு பெரிதும் பயன்படும் என்றும் புஷ்பவனம் குப்புசாமி விளக்குகிறார். மேலும் எலுமிச்சம் செடி இருக்கும் இடங்களில் புற்கள் இருக்க கூடாது அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதில் புற்கள் இருந்தால் செடிக்கு கொடுக்கும் உரம் புற்களுக்காக கொடுத்த மாதிரி ஆகிவிடும்.
அதேபோல் தண்ணீர் அடிக்கடி விட வேண்டும். செடியின் இலை காயாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இலை காய்ந்துவிட்டால் செடியில் காய் வைப்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“