இன்றைய காலக்கடத்தில், மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக பலரும் பலவிதமாக நோய்களுக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது. அந்த நோய்களுக்கு இயற்கையில் மருத்துவம் இருந்தாலும், பலரும் ஆங்கில மருத்துவத்தையே அணுகி வருகின்றனர். ஆனால் அதை விட இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களே பல நோய்களை தீர்க்கும் திறன் கொண்டது.
அந்த வகையில் முடக்கத்தான் பயன்களும் இதில் இருந்து சட்னி எப்படி செய்வது என்பதையும் இதில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை – கால் கப்
நல்லெண்ணெய் – ஒன்னறை கப்
தேங்காய் துருவல் – அரை கப்
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 3 பல்
கடுகு – கால் டீஸ்பூன்
புளி – தேவையான அளவு
உப்பு மற்றும் தண்ணீர் தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் சேர்த்து முடக்கத்தான் கீரையை நன்றாக வதக்கவும். அதேபோல் மற்றொரு பாத்திரத்தில், தேங்காய் துருவல், பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். அதன்பிறகு முடக்கத்தான் கீரை மற்றும் தேய்ங்காய் பூண்டு மிளகாய் கலவை அனைத்தையுமு் ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கலவையை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு, சேர்த்து வதக்கவும். கடுகு நன்றாக பொறிந்தவுடன், அதில் முடக்கத்தால், தேங்காய், பூண்டு, மிளகாய் கலவையை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால் சுவையான முடக்கத்தான் சட்னி தயார்.
முடக்கத்தான் கீரை நன்மைகள் :
வாத நோய்களுக்கு முடக்கத்தான் கீரை நன்மை தரும். இதில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல், மூல நோய், பாதவாதம் உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வாக இருக்கும். சொறி சிரங்கு மாதிரியான தோல் நோய்களுக்கு முடக்கத்தான் கீரை நன்மை தரும். மாதவிடாய் பிரச்சனைகள், முட்டுவலி, உள்ளிட்ட நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“