விருந்து நிகழ்ச்சியில், சாப்பிட்டுவிட்டு கடைசியாக ரசம் சாதம் சாப்பிடுவது வழக்கம். எவ்வளவு உணவு சாப்பிட்டாலும் கடைசியில் ரசம் சாதம் சாப்பிடும்போது சாப்பிட்ட அனைத்தும் எளிதில் ஜீரனமாகும் என்று சொல்வார்கள். அதே சமயம் தனியாக ரசம் சாதம் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காத ஒரு உணவாக இருக்கும். ஆனால் இந்த முறையில் ரசம் சாதம் செய்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
தென்னிந்தியாவின் சுவையான ரசம் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரிசி – ஒருகப்
துவரம்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி – 2
தண்ணீர் 8 கப்
புளி கரைசல் – ஒரு கப்
வெல்லம் – சிறிதளவு
ரசப்பொடி – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 2
பெருங்காள தூள் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரில், அரசி, துவரம்பருப்பு, மஞ்சள் தூள் உப்பு, தக்காளி, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து 4 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும்வரை வேக வைக்கவும். அதன்பிறகு, அதில் புளி கரைசலை சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை அதில் சேர்த்து வேக வைக்கவும். நன்றாக கொதித்து வந்தவுடன் அதில், ரசப்பொடியை தண்ணீர்விட்டு கரைத்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் வேக வைக்கவும்.
தனியாக அடுப்பில் ஒரு பான் வைத்து, அதில் நெய், கடுகு, சீரகம், முந்திரி, வரமிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வரும்வரை தாளித்து குக்கரில் இருக்கும் சாதத்தில் கொட்டி நன்றாக கிளறவும். சுவையான தென்னிய ஸ்பெஷல் ரச சாதம் தயார். தனியாக ரசம் சாதம் பிடிக்காத என்று சொல்பவர்கள் கூட இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“