Breakfast recipes in tamil: எப்போதும் வழக்கமான தோசை சாப்பிட்டு போர் அடுத்துவிட்டதா? சத்தான மிகவும் சுவையான மோர் தோசை செய்து கொடுத்து பாருங்கள்.வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.இது காலை உணவுக்கு ஏற்றது.
மோர் தோசை செய்ய தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 3 கப்
அவல்- 1 கப்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
மோர் - 500மி.லி.
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய்
பேக்கிங் சோடா(விருப்பப்பட்டால்) -1/4 ஸ்பூன்
செய்முறை விளக்கம்
•புழுங்கல் அரிசியையும், உளுந்தையும் நீரில் அலசிவிட்டு அதில் அவல் சேர்த்து கலக்கவும்
•அதில் மோரை ஊற்றி 5 அல்லது 6 மணி நேரம் ஊற வைக்கவும்
•வழக்கமாக தோசைக்கு அரைக்கும் பதத்தை விட சற்று நைசாக அரைக்கவும்
•பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்
•தவா அல்லது தோசைக்கல்லை சூடாக்கி அதில் லேசாக எண்ணெய் தடவவும்
•தோசைக்கல்லில் மாவை ஊற்றி லேசாக தேய்க்கவும். பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு மூடியால் மூடி வைக்கவும்.
•2 நிமிடங்களுக்குப் பிறகு தோசை வெந்ததும் எடுக்கவும். திருப்பிவிட்டு வேகவைக்க தேவையில்லை.
ரொம்ப சாஃப்ட்டான மோர் தோசை ரெடி. சட்னியுடன் சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"