Actress Anushka Sharma Making Recipe : பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா தக்காளி பழத்தில் ஜாம் செய்து அதனை தனது பெற்றோடுக்கு பரிமாறும் வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் விராட்கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வாமிகா என்ற ஒரு வயது மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் படங்களில் பிஸியாக நடித்து வந்த அனுஷ்கா, குழந்தை பிறந்த பின் சினிமாவுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்தார். ஆனாலும் அம்மா என்ற நிலையில், தனது குழந்தையை கவனித்துக்கொள்வதில் பிஸியாக இருந்து வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள அனுஷ்கா சர்மா நடிப்பில், சக்தா எக்ஸ்பிரஸ் திரைபடம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அனுஷ்கா சமையலில் கவனம் செலுத்தி வருகிறார். குழந்தை பிறப்பதற்கு முன்னாள் வீட்டில் ஒய்வில் இருந்த அனுஷ்கா, கடந்த 2020-ம் ஆண்டு ஊரடங்கு சீசனில் வலைதளங்களில் உணவு மற்றும் சமையல் தொடர்பாக வீடியோக்களை பார்ப்பதில் பிஸியாக இருந்துள்ளார்.
இந்த வீடியோக்களை பார்ப்தோடு மட்டுமல்லாமல், அந்த உணவுகளை எப்படி செய்வது என்று முயற்சியும் செய்துள்ளார். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக அனுஷ்கா தான் ஜாம் மேக்கிங் செய்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,”நான் பல உணவு வலைப்பதிவுகளைப் பார்த்தபோது, 2020 லாக்டவுனுக்குத் திரும்பது போல் உள்ளது. இதனால் இந்த ஜாம் செய்யும் வீடியோவைப் படமாக்க முடிவு செய்தேன், மேலும் 2021 க்குள் கொரோனா வைரஸ் ஒழிந்துவிடும் என்று நினைத்தேன். என்று கூறியுள்ளார்.
இந்த ஜாம் தயார் செய்வதற்காக புதிய தக்காளிகளைத் தேடி ஒரு பழத்தோட்டத்திற்குச் சென்றுள்ளார். இதறகாக அவர் கையில் ஒரு கூடையுடன் தன் நாயின் அருகில் இருக்கிறார். அந்த தோட்டத்தில், அவர் பழுத்த தக்காளியைப் பறித்து, வீட்டிற்குத் திரும்பி வருகிறார். அதன்பிறகு, தக்காளியை குழாய் நீரில் கழுவி, தண்ணீரில் கொதிக்க வைக்கிறார். சிறிது நேரத்திற்கு பின் தக்காளியை எடுத்து தோல் உறித்து குளிர்ந்த நீரில் கழுவி, தோலுரித்து வெட்டுகிறார்.
அதன்பிறகு ஜாம் தயாரிப்பதற்காக தக்காளியை ஒரு பாத்திரத்தில் சமைக்கிறாள். இந்த ஜாமை காலை உணவாக ரொட்டியுடன் தனது பெற்றோருக்கு பரிமாறுகிறார். இதன் சுவையால் ஈர்க்கப்பட்ட அனுஷ்காவின் தந்தை தனது மனைவயின் காதில் ஏதோ முனுமுனுத்து சிரிக்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த ஜாம் தயாரிக்கும் முழு செயல்முறையையும் “ஆர்கானிக்” என்று கூறியுள்ளார்., மற்றொருவர், பணக்காரர்களுக்கு சமைக்கத் தெரியாது என்று நாங்கள் நினைத்தோம் என்று கூறியுள்ளார். மேலும் ஒருவர் “அனுஷ்கா ஷர்மா உணவு பதிவர் காலம்” என்று கருத்து தெரிவித்தார். “அனுஷ்காவின் சமையல் வகுப்புகளுக்கு வரவேற்கிறோம். இன்று நாங்கள் தக்காளி சட்னி செய்வோம். என்றும்,” மற்றொருவர், “ரெசிபி ப்ளீஸ்” என்றும் கேட்டுள்ளார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் கணவர் விராட் கோலியுடன் இருந்த அனுஷ்கா சர்மா மற்றும் அவரது குழந்தை வாமிகா, கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசித்தனர். தற்போது அனுஷ்கா நடித்து வரும், சக்தா எக்ஸ்பிரஸ் படம், முன்னாள் கிரிக்கெட் வீராங்களை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. அவர் தனது சகோதரர் கர்னேஷ் ஷர்மாவுடன் இணைந்து தனது தயாரிப்பு நிறுவனமான க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸின் கீழ் தனது பல படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “