Advertisment

சுவையான தேனில் இவ்ளோ பலன் இருக்கு... எப்போ, எப்படி சாப்பிடணும் தெரியுமா?

Tamil Health News : ஒரு தேக்கரண்டி தேனில் கொழுப்புகள், கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் இல்லாத 64 கலோரிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

author-image
WebDesk
New Update
சுவையான தேனில் இவ்ளோ பலன் இருக்கு... எப்போ, எப்படி சாப்பிடணும் தெரியுமா?

Tamil Health Honey Benefits Update : இயற்கையில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவுப்பொருட்களில் தேனுக்கு மக்கிய இடம் உண்டு, நல்ல ஆரோக்கியத்தின் அமுதம் என்று அறியப்படும் தேன் பல வழிகளில் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.  ஒரு தேக்கரண்டி தேனில் கொழுப்புகள், கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் இல்லாத 64 கலோரிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த தங்க திரவம் மனித இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்கிறது.

Advertisment

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் நிறைந்த தேன், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் இரைப்பைக் குழாயின் உள்ளே உள்ள சிறிய காயங்களை குணமாக்கி வயிற்றின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. உங்கள் தினசரி உணவில் குறைந்தபட்சம் ஒரு தேக்கரண்டி கலப்படமில்லாத தேனைச் சேர்க்க வேண்டும்.

ஏன் என்பதற்கு10 காரணங்கள் :

தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீருடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் உங்கள் இதயம் வலுவாக இருக்க உதவும். இது தமனிகள் சுருங்குவதைத் தடுக்கிறது, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

தேனை தொடர்ந்து உட்கொள்வது உடலில் பசியை அடக்கும் ஹார்மோன்களின் வெளியீட்டை ஊக்குவிக்கும். எனவே, இது எடை குறைப்பக்கு பலன்கொடுக்கும்

தூங்குவதற்கு முன், தேன் சாப்பிட்டால், தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன், மெலடோனின் வெளியீட்டை ஊக்குவிக்கும். இதனால். ஒவ்வொரு இரவும் நீங்கள் ஒரு மன அழுத்தம் இல்லாத நிம்மதியான தூக்கத்தை பெற உதவுகிறது.

உங்கள் உடலில் அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்கவும் தேன் உதவுகிறது.

உலக சுகாதார அமைப்பு (WHO) தேனை இயற்கை இருமல் தீர்வாக பரிந்துரைக்கிறது. எனவே நீங்கள் தலைசுற்றலை ஏற்படுத்தும் இருமல் மருந்துக்கு பதிலாக தேன் சாப்பிட்டு வரலாம்.

 பல ஆண்டுகளாக தேன் ஒரு கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது. தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடும் போது உடலில் உட்புற காயங்களை ஆற்றும் மற்றும் ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை உறுதி செய்யும். உடலில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. மேலும்  செலியாக் நோய், பெருங்குடல் அழற்சி, கிரோன் நோய், எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்) போன்ற நோய்களைத் தடுக்கிறது.

தேனில் உள்ள குளுக்கோஸ் உள்ளடக்கம் சோர்வைப் போக்கவும், நாள் முழுவதும் உங்கள் உடலின் ஆற்றல் அளவை குறையாமல் வைத்திருக்கவும் உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த தேன் உங்கள் உடலை வீக்கம் மற்றும் ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கிறது.

தேன் மன அழுத்த நிவாரணியாகவும் செயல்படுகிறது. இதில் கால்சியம் நிறைந்துள்ளதால், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது.

தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life Natural Honey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment