Tamil Health Immunity Booster Foods : உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தி ஒரு இன்றியமையாத தேவையாகும். இதனை மேம்படுத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போது குளிர்காலம் அதன் முழு வீச்சில் உள்ளது, அதே நேரத்தில், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு ஒமைக்ரான் தொற்று பெரும் அச்சுறுது்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில், உடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாக இருக்கவும், சில இயற்கை உணவு பொருட்களை தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
நெய்
ஆயுர்வேதத்தின் படி, நெய், எளிதில் ஜீரணிக்கக்கூடிய கொழுப்புகளில் ஒன்றாகும், இது உங்களை சூடாக வைத்திருக்க உடனடி வெப்பத்தையும் ஆற்றலையும் உருவாக்கும் திறன் கொண்டது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் தோல் வறட்சி மற்றும் செதில்களாக மாறாமல் தடுக்கிறது. சாதம், பருப்பு அல்லது ரொட்டியில் நெய் பயன்படுத்தலாம்.
சர்க்கரை வள்ளி கிழங்கு
வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது மலச்சிக்கலை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு ஒரு துண்டு சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடும்போது வைட்டமின் சி ஒரு நல்ல டோஸ் கிடைக்கும் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நீங்கள் பாலுடன் இதனை சாப்பிடலாம்
நெல்லிக்காய்
இது ஒரு பருவகால உணவாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. பல தொற்று நோய்களைத் தடுக்கிறது. முராப்பா, ஊறுகாய், சாறு, சட்னி அல்லது தூள் வடிவில் சிறந்த ஊட்டச்சத்துக்களைப் பெற இதை உட்கொள்ளலாம்.
பேரீச்சம் பழம்
கேக் முதல் ஷேக்ஸ் வரை, பேரீச்சம்பழம் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. கால்சியம் நிறைந்த பேரீச்சம்பழம் எலும்பு மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்க உதவுகிறத பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் கீல்வாதம் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். .
வெல்லம்
இரும்புச்சத்து நிறைந்த ஆதாரமாக, வெல்லம் உள்ளது. சிவப்பு இரத்த அணுக்களுக்கு ஆக்ஸிஜனை பிணைக்க உதவுகிறது. கடா வடிவில் வெல்லத்தை தொடர்ந்து உட்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நல்லது என்று ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, அதிக உடல் வெப்பநிலை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு குறைவாகவே உள்ளது. வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.
தினை
பொதுவாக தினைகள் நார்ச்சத்து நிறைந்தவை, குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன, மேலும் அவை பல ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. இவற்கை குளிர்கால உணவில் சேர்த்துக்கொள்வது உடலை ஆரோக்கியமாக்குகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். உதாரணமாக, ராகியை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது,
ஏனெனில் அதில் உள்ள அமினோ அமிலம் பசியைக் குறைக்கும். நார்ச்சத்து நிறைந்த ராகி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தூக்கமின்மை, பதட்டம் மற்றும் மனச்சோர்வு நிலைமைகளுக்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி நிறைந்த பஜ்ரா தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. குளிர்காலத்தில் சூடாக இருக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்தது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதனால் உடல் ஆரோக்கியத்தை உருவாக்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil