Tamil News Update For Health : கர்நாடக தலைநகர் பெங்களூருவை தலைமையிடாமாக கொண்டு செயல்படும் பிரபல உணவுப்பொருள் தயாரிக்கும் நிறுவனமான ஐடி ஃப்ரெஷ் ஃபுட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தங்களது தயாரிப்புகளில் மாமிசம் கலப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்நிறுவனம் சார்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஐடி ஃப்ரெஷ் ஃபுட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரெடிமேட் சமையல் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மிகவும் பிரபலமான இந்த நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களில் விலங்குகளின் மாமிசத்தை பயன்படுத்துவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் அடுத்த சில நாட்களில் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அந்நிறுவனம் இது "தவறாக வழிநடத்தும் செல் மற்றும் பொய்யான தகவல்களுக்கு என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தில் நிறுவனர் பி சி முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நிறுவனம் மற்றும் அதன் தயாரிப்புகள் பற்றி தவறான மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதற்கு எதிராக, ஐடி ஃப்ரெஷ் ஃபுட் இந்தியா பிரைவேட் லிமிடெட், நாங்கள் வாட்ஸ்அப் குறைகேள் செல் மற்றும் பெங்களூரு சைபர் கிரைம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளோம்.
கடந்த 2005 ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து ஐடி நிறுவனம் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் உலகளாவிய உணவுப் பொருட்களை தயாரிக்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது, ”என்று கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற "தீங்கிழைக்கும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள்" பரவுவதை நிறுவனத்தின் சார்பில் கண்டிக்கிறோம் என்றும், இந்த பிரச்சினையை சட்டசப்படி சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அந்நிறுவன செய்தித் தொடர்பானர் ஒருவர் கூறுகையில்,, நிறுவனம் கடந்த சில நாட்களாக தனது தயாரிப்புகளில் மாமிசத்தை பயன்படுத்துவது குறித்து ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக பதிவுகள் பலரால் பரவலாக பகிரப்பட்டதை அடுத்து நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் தெளிவுபடுத்துகின்றனர். சென்னை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் ஐடி நிறுவனம் தயாரிக்கும் இட்லி/தோசை மாவை விற்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் முஸ்லிம்களை மட்டுமே பணியமர்த்துகிறது மற்றும் ஹலால் சான்றிதழ் பெற்றது என்பது உண்மையில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஐடி ஃப்ரெஷ் ஃபுட், ஒரு தனியார் லிமிடெட் நிறுவனம், பி.சி. முஸ்தபா மற்றும் அவரது அப்துல் நாசர், ஷம்சுதீன் டி.கே, ஜாபர் டி.கே, மற்றும் நவ்ஷாத் டி.ஏ.ஆகிய நான்கு உறவினர்கள் மூலம் 2014 ஆம் ஆண்டில், ஐடி ஃப்ரெஷ் உணவுகள் ஹெலியன் வென்ச்சர் பார்ட்னர்ஸின் முதல் சுற்று நிதியில் ரூ. 35 கோடியை திரட்டியது. கடுமையான ஷரியத் இஸ்லாமிய சட்டத்தை கடைபிடிக்கும் ஒரு நாட்டின் முதல் துணிகர மூலதன ஒப்பந்தம் இதுவாகும் என்று கூறியுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், "ஒவ்வொரு இந்துவும் ஐடி இடி மற்றும் தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறி இந்த பிரச்சினையை மதவாத பிரச்சனையாக மாற்ற முயற்சிப்பதாக பதிவிட்டப்பட்டுள்ளது. அதே நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட மற்றொரு செய்தியில், , மாவை தயாரிக்க "மாட்டு எலும்புகள் மற்றும் கன்றுக்குட்டிகளை" பயன்படுத்துவதாக பொய்யான தகவல்கள் பரப்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐடி ஃப்ரெஷ் ஃபுட் இந்தியா பிரைவேட் லிமிடெட் வெளியிட்ட அறிக்கையில், ஐடி தனது தயாரிப்புகளை தயாரிக்க சைவ பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். ஐடி இட்லி தோசை மாவில், அரிசி, உளுந்து பருப்பு, தண்ணீர் மற்றும் வெந்தயம் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அவை 100% இயற்கை மற்றும் சைவ வேளாண் பொருட்களாகும். எங்கள் எந்த தயாரிப்புகளிலும் விலங்கு மாமிசம் பயன்படுத்தப்படவில்லை ”என்று கூறுகிறது.
உணவுப் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புடன் முழுமையாக இணங்கக்கூடிய மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைப்பு சான்றிதழ் (FSSC) 22000 சான்றிதழுடன் தயாரிக்கப்படும் தங்கள் உற்பத்தி பொருட்களில் ரசாயனங்கள் அல்லது பாதுகாப்பான, "ஆரோக்கியமான மற்றும் உண்மையான" இந்தியப் பொருட்களைத் தயாரிப்பதாகவும் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.