மோசமான பல் ஆரோக்கியம் தீவிர கொரோனா தொற்றை ஏற்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Tamil Health Update : வாயில் பாக்டீரியாக்கள் தீவிரமடைந்தவுடன், அவை ஈறு நோயை உண்டாக்கி, வாயின் திசுக்களை மெல்லும் மற்றும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்

Tamil Health Update : கொரோனா தொற்று பாதிப்பு உடல் ஆரோக்கியத்தில் நாம் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது. நமது வாழ்நாள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றால்,  உடல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய தேவை பல் ஆரோககியம். பல் சிறப்பாக ஆரோக்கியத்துடன் இருக்கும்போது நாம் பல தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க முடியும்.

ஆனால் பல் துலக்காமல் இருப்பது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் மோசமான பல் ஆரோக்கியம் கொரோனா தொற்று அதிகரிப்பை ஊக்குவிக்கும் என்று நிரூப்பிக்கப்பட்டுள்ளது. மோசமான வாய் ஆரோக்கியம் உள்ளவர்கள் கொரோனா கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது அதன் அறிகுறிகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தம். பல் ஈறு நோய் உள்ள கொரோனா நோயாகளிகள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்த தீவிர சிகிச்சையில், வென்டிலேட்டரில் வைக்கப்பட வேண்டியதை விட 4.5 மடங்கு அதிகமாகவும், கோவிட் நோயினால் இறப்பதற்கு ஒன்பது மடங்கு அதிகமாகவும் உள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், வாய் சுகாதாரம் மற்றும் பிற நோய்களுக்கு இடையேயான தொடர்பைக் கருத்தில் கொள்ளும்போது, ​​வாய் ஆரோக்கியத்திற்கும் கொரோனா தொற்றுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது என்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலாக இருக்காது.

மோசமான வாய்வழி சுகாதாரம் பல நோய்களுடன் தொடர்புடையது. இது நீண்ட காலத்திற்கு நீடித்து, டிஸ்பயோசிஸுக்கு வழிவகுக்கும். அதுவரை வாயில் அமைதியான நிலையில் இருக்கும் பாக்டீரியா ஆக்ரோஷமாக மாறுகிறது. வாயில் பாக்டீரியாக்கள் தீவிரமடைந்தவுடன், அவை ஈறு நோயை உண்டாக்கி, வாயின் திசுக்களை மெல்லும் மற்றும் இரத்த ஓட்டத்தில் நுழைந்து உடலைச் சுற்றிப் பாய்ந்து பல்வேறு உறுப்புகளில் சென்று, வீக்கத்தின் அளவை உயர்த்தி, காலப்போக்கில் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

உண்மையாக இப்படி நடந்தால், இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதன் மூலம் நீரிழிவு நோயை மோசமாக்கும். இது மூட்டுவலி, சிறுநீரக நோய்கள், சுவாச நோய் மற்றும் அல்சைமர் உட்பட சில நரம்பியக்கடத்தல் நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை. லேசான அல்லது மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, ​​கடுமையான கொரோனா தொற்று உள்ளவர்கள் குறிப்பிட்ட அழற்சி குறிப்பான் (சிஆர்பி என அழைக்கப்படுகிறது) அளவுகளை உயர்த்தியுள்ளனர். கடுமையான கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சிலர் “சைட்டோகைன் புயல்” என்ற தாக்கத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில உள்ள பாக்டீரியாக்கள் நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸை எதிர்த்துப் போராடி, உடலின் சொந்த திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

மோசமான வாய்வழி ஆரோக்கியம் உள்ளவர்கள் சில சமயங்களில் சிஆர்பி மற்றும் சைட்டோகைன்களின் உயர்ந்த அளவைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இரண்டு நோய்களும் ஒரே நேரத்தில் சந்தித்தால், கொரோனா வைரஸ் மற்றும் ஆக்கிரமிப்பு வாய் பாக்டீரியா இரண்டும் இரத்தத்தில் சேரும்போது, உடலின் சொந்த திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நோயெதிர்ப்பு சக்தியை முடக்கும் அபாயம் உள்ளது.

கோவிட் மற்றும் பிற சுவாச வைரஸ் நோய்களின் பெரிய பிரச்சனை பாக்டீரியா சூப்பர் இன்ஃபெக்ஷன் ஆகும். நுரையீரல் மற்றும் சுவாசப்பாதைகள் போன்ற வைரஸால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரே நேரத்தில் பாக்டீரியாவால் பாதிக்கப்படுகின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாக்டீரியா சூப்பர் இன்ஃபெக்ஷன் பொதுவானது, மேலும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகவும் பொதுவானவை. அவை என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது துல்லியமாகத் தெரியவில்லை,

ஆனால் இந்த ஒரே நேரத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் கடுமையான நோய் மற்றும் இறப்பு அபாயத்தை உயர்த்துகின்றன என்று கருதுவது நியாயமானது. தொற்றுநோய் முழுவதும், கொரோனா இறப்பவர்களில் பெரும் பகுதியினர் – சில சந்தர்ப்பங்களில், 50% – ஒரே நேரத்தில் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

ஒருவரின் வாய்வழி சுகாதாரம் மோசமாக இருந்தால், இது சூப்பர் இன்ஃபெக்ஷனின் அபாயத்தை அதிகரிக்கலாம். மோசமான வாய்வழி சுகாதாரம் என்பது வாயில் அதிக ஆக்கிரமிப்பு பாக்டீரியாவைக் குறிக்கிறது, இது ஒரு சூப்பர் இன்ஃபெக்ஷனைத் தொடங்க சுவாசப்பாதை மற்றும் நுரையீரலில் எளிதாக ஊடுருவலாம் இதற்கு மேல், மோசமான வாய் ஆரோக்கியமும் கொரோனா வைரஸால் உடலைப் பாதிக்க உதவும்.

ஈறு நோயை உண்டாக்கும் பாக்டீரியாவிலிருந்து வரும் நொதிகள், வாய் மற்றும் சுவாசக் குழாயின் மேற்பரப்பை மாற்றியமைத்து, மற்ற நுண்ணுயிரிகளான கொரோனா வைரஸ் போன்ற இந்த பரப்புகளில் ஒட்டிக்கொண்டு அங்கு வளர எளிதாக்குகிறது. இதற்கிடையில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  குறிப்பாக ஏற்கனவே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது இருதய நோய் போன்ற நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோசமான வாய்வழி சுகாதாரம் சிக்கல்களுக்கு ஆபத்து காரணி என்று கருத போதுமான சான்றுகள் உள்ளன.

மோசமான வாய் ஆரோக்கியம் கொரோனா தொற்றை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகும். எனவே சரியான வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பது முக்கியமானது. இதில் இருந்து பாதுகாக்க பற்பசையைக் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை குறைந்தது இரண்டு நிமிடங்களாவது பல் துலக்குவது மற்றும் பல் மருத்துவரை தவறாமல் சந்திப்பது. நல்ல வாய்வழி ஆரோக்கியம் மற்றும் உங்கள் வாயை கவனித்துக்கொள்வது கடுமையான அறிகுறிகளை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health bad oral health could raise the risk of covid

Next Story
சுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்? டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com