கருப்பை ஆரோக்கியம்… பெண்களுக்கு உளுந்தங் கஞ்சி ரொம்ப முக்கியம்!

Tamil Health Update : தோல் நீக்காத கருப்பு உளுந்தில் தான் அதிக சத்துகள் அடங்கியுள்ளது. இதில் கால்சியம் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியை தரும்

Tamil Lifestyle Updte For Women Health : ஒரு தலைமுறையை தோற்றுவிப்பத்தில் பெரும்பாலான பங்கு பெண்களுக்குதான் உண்டு. பெண் குழந்தைகள பிறந்தது முதல் தன் வாழ்நாளின கடைசி காலங்கள் வரை பலவிதமான உடல் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மாதவிடாய் மற்றும் பிரசவத்தின் போது பெண்கள் மறுபிறவி எடுப்பார்கள் என்று சொல்லுவார்கள்  இந்த பிரச்சனைகளி்ன் காரணமாக அவர்களின் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டு சிறுவயதிவேயே மரணத்தை தழுவும நிலை கூட ஏற்படுகிறது.

இந்த சிக்கல்களில் இருந்து விடுபட பெண்கள் தங்கள் வாழ்நாளில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். பழங்காலத்தில் பெண்கள் எவ்வித இன்னல்களும் இன்றி வீட்டிலேயே தங்களது பிரசவத்தை முடித்துக்கொண்டனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் வாழ்க்கை முறை அவர்கள் எடுத்தக்கொண்ட சத்தான உணவு. முக்கியமாக கருப்பை ஆரோக்கியம். பழங்காலத்தில் இயற்கையாக பெண்கள் எடுத்தக்கொள்ளும் உணவில் கருப்பை ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் கிடைத்தது.

இதன் காரணமாக தங்களது பிரசவத்தை வீட்டிலேயே முடித்துவிட்டார்கள் அவர்கள் வயதானவர்கள் என்றலும் கூட உடல் ஆரோககியத்தில் எவ்வித குறைப்பாடும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இதற்கு முக்கிய காரணமாக உளுத்தம் பருப்பை கூறலாம். சமையலுக்கு உகந்த முக்கிய உணவுப்பொருட்களில் உளுந்தம்பருப்புக்கு தனி இடம் உண்டு. மேலும் உளுத்தம் பருப்பை சரியான முறையில் எடுத்துக்கொள்ளும்போது பெண்களுக்காக கருப்பை ஆரோக்கியம் மேம்படும். அதிலும் குறிப்பாக உளுத்தம் கஞ்சி முக்கிய ஆரோக்கிய உணவாகும்.

சமையலுக்கு முக்கிய பொருளாக பயன்படுத்துப்படும் உளுத்தம் பருப்பை குழம்பு தாளிக்கவும், இட்லிக்கு மாவு ஆட்டும்போது பயன்படுத்துவோம். இதில் உளுத்தம்பருப்பு 2 வகைகளில் உள்ளது ஒன்று வெள்ளை உளுந்து மற்றொன்று கருப்பு உளுந்து. ஆனால் கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் உணவுப்பொருள் கருப்பாக வந்துவிடும் என்று நினைத்து பலரும் தற்போது தோல் நீக்கிய வெள்ளை உளுந்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.  

ஆனால் தோல் நீக்காத கருப்பு உளுந்தில் தான் அதிக சத்துகள் அடங்கியுள்ளது. இதில் கால்சியம் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் கருப்பு உளுந்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலின சர்க்கரையின் அளவை குறைக்கிறது. பெண்களின் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

பெண்கள் கருப்பை ஆரோக்கியத்திற்கு உளுத்தம் பருப்பை எப்படி சாப்பிட வேண்டும்?

தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து – 1 டம்ளர்

புழுங்கள் அரிசி -1 டம்ளர்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

மிளகு 2 டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

ஓமம் 1 டீஸ்பூன்

சுக்குத்தூள் – கால் டீஸ்பூன்

கல்உப்பு – தேவையான அளவு

தேங்காய் துண்டுகள் – 5 துண்டுகள்

செய்முறை :

முதலில் உளுந்தை லேசாக வறுத்து ஒன்னும் முக்காலுமாக மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து அரிசி வெந்தயம், சீரகம், மிளகு, ஓமம், உள்ளிட்ட அனைத்தையும் லெசாக வறுத்து பொடி செய்துகொள்ளவும்

இவை அனைத்தையும் குக்கரி்ல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்த குழையும் அளவுக்கு வேகவைக்கவும். அதன்பிறகு அதில் கல்உப்பு, தேங்காய் துண்டுகள், சுக்குத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். கடைசியாக நெய் விட்டு இறக்க வைத்துவிடவும். இந்த கலவையை பெண்கள் வாரம் ஒருமுறை குடித்து வரும்போது கருப்பை கோளாறுகள் இல்லாமல் வாழலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை குடிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து – 1 டம்ளர்

பனைவெல்லம் அல்லது கருப்பட்டி – 2 டம்ளர்

நெய் – 10 டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 5 டீஸ்பூன்

சுக்குத்தூள் மற்றும் ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை

பாதாம் முந்திரி திராட்சை பிஸ்தா – சேர்த்து கால்கப்

செய்முறை :

உளுத்தம் பருப்பை லேசாக வறுத்து கொரகொரப்பாக பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள உளுத்தம் பருப்பு பொடியை அதில் சேர்த்து கிளரவும். அதன்பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து கைப்படால் கிளரவும்ஃ

பாகு நன்றாக வெந்தவுடன், கருப்பட்டி அல்லது பனை வெல்ல பொடியை சேர்க்கவும். அதன்பிற தேங்காய் துருவலை சேர்த்து சிறிது நேரத்திற்கு பிறகு கொத்தித்வுடன், உலர் பருப்புகளை நெய்யில் வருத்து சுக்குத்தூள் மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்கவும். அதன்பிறகு இறக்கி வைத்து சாப்பிடலாம்.

வயது வந்த பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின்போது இதை கொடுத்தால். மாதவிடாய் பிரச்சனை சரியாகும். கருப்பு உளுந்து இருப்புச்சத்து நிறைந்துள்ளது என்பதால், பெண்களுக்கு எல்லா காலங்களிலும் உடல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health black gram dal benefits for women health uluthang kanji

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com