scorecardresearch

ஒரு கிளாஸ் தண்ணீர், 3 மிளகு… எவ்ளோ நன்மை தெரியுமா?

Tamil Health Update : கருப்பு மிளகு தண்ணீர் ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய பானமாக உள்ளது. இந்த நீரை தயாரிக்க நீண்ட நேரம் தேவையில்லை

ஒரு கிளாஸ் தண்ணீர், 3 மிளகு… எவ்ளோ நன்மை தெரியுமா?

Tamil Health Benefits Black Pepper : உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம். அதிலும் பெரும்பாலான மக்கள் தற்போது ஆயுர்வேதம் மற்றும் இயறகை பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை நாடிச்செல்கின்றனர். இயற்கை மருத்துவம் மட்டுமல்லாது இயற்கையாக கிடைக்கும் உணவுப்பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகினறனர்.

இதனை கருத்தில் கொண்டு பலரும் தங்களது தினசரி உணவு முறையில் மற்றம் செய்துள்ளனர். உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது கட்டாயம். இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருந்தாலும், அந்த உணவு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்த நிலையில் உள்ளவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சிறந்த மற்றும் எளிய வழிமுறை உள்ளது.

கருப்பு மிளகு தண்ணீர் ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய பானமாக உள்ளது. இந்த நீரை தயாரிக்க நீண்ட நேரம் தேவையில்லை. அதிக பொருட்களும் தேவையில்லை. வீட்டில் எளிமையாக கிடைக்கும் தண்ணீர் மற்றும் மிளகை பயன்படுத்தி எளிய முறையில் இந்த நீரை தயாரித்து பருகலாம்.

கருப்பு மிளகு நீரின் ஆரோக்கிய நன்மைகள்

கருப்பு மிளகு அனைத்து கடைகள் அல்லது பல்பொருள் அங்காடியிலும் பரவலாகக் கிடைக்கும் அன்றாடப் பொருளாகும். உணவில் கூடுதல் சுவையை சேர்க்க இந்த மூலப்பொருளைப் பயன்படுத்தும் போது, ​​இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளையும் கொண்டுள்ளது.

குடல் பாக்டீரியா, மனநிலை, நாள்பட்ட நோய்கள், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் பலவற்றை பாதிக்கிறது. கறுப்பு மிளகு குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது, இதனை சாப்பிடும் போது உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இது இயற்கையான முறையில் உடலை நச்சு நீக்கவும் உதவும்.

ஒரு ஆய்வின்படி, கருப்பு மிளகாயில் பைபரின், ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட ஒரு கலவை நிறைந்துள்ளது. இந்த கலவை ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தை தடுக்க உதவும்.

எடை குறைப்பு என்பது கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாகும். பலர் தங்கள் வழக்கத்தின் ஒரு பகுதியாக காலையில் தண்ணீர் குடிக்கும்போது, ​​​​ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் சேர்ப்பது நன்மைகளை அதிகரிக்கும். இவை இரண்டும் சேர்ந்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும், இதன் விளைவாக செரிமானம் மேம்படும் மற்றும் கலோரிகள் எரிக்கப்படும்.

நீங்கள் அஜீரணத்தால் அவதிப்பட்டால், கருப்பு மிளகு நீர் உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். இது செரிமான நொதிகள் மற்றும் செரிமானத்திற்கு உதவும் திரவங்களுடன் தொடர்புகொள்வதாக அறியப்படுகிறது. இது கணைய நொதிகளில் ஒரு நன்மை விளைவைக் கொண்டிருக்கிறது, இதன் மூலம் முழு செரிமான செயல்முறையையும் மேம்படுத்துகிறது.

வெந்நீர் மற்றும் கருப்பு மிளகு கலவையானது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது மற்ற நன்மைகளைப் போலவே சரும செல்களை நிரப்புவதன் மூலம் வறட்சியை குணப்படுத்துகிறது. இது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். மேலும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

கருப்பு மிளகு தண்ணீர் செய்வது எப்படி?

முதலில், ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று கருப்பு மிளகை சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நிறம் மாற ஆரம்பித்ததும், அதை ஒரு குவளையில் ஊற்றி பருகவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health black pepper water benefits in tamil update