உலகளவில் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். 1990 -களில் இந்தியாவில் மிகவும் பொதுவான புற்றுநோய்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த மார்பக புற்றுநோய் தற்போது தேசிய மருத்துவ நூலகத்தின்படி, முதன்மையான இடத்தை பிடித்துளளது. பொதுவாக மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. இதனை முற்றிலும் தடுக்க முடியாது, அதே சமயம் சரியான நேரத்தில் கணடறிந்தால் புற்றுநோயாளிகளின் வாழ்நாள் விகிதத்தை அதிகரிக்கலாம்.
“மார்பக புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் அதை ஆரம்பத்திலேயே கண்டறியத் தவறியது மார்பகப் புற்றுநோயாளிகளின் அதிக இறப்புக்கான காரணங்களில் ஒன்று என்று ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டிட்யூட்டின் மூத்த ஆலோசகர் ரேடியேஷன் ஆன்காலஜிஸ்ட் டாக்டர் சுனீதா முலிந்தி கூறினார். இந்த மார்பக புற்றுநோயை ஆரம்ப கண்டறிதலுக்கு சுய பரிசோதனை முக்கியமானது.
மார்பக சுய பரிசோதனை என்றால் என்ன?
சுய மார்பகப் பரிசோதனை என்பது பெண்கள் வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய மார்பகப் பரிசோதனையாகும். “பல பெண்கள் உண்மையைப் புறக்கணிக்க முனைந்தாலும், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு சுய மார்பகப் பரிசோதனை முக்கியமானது” என்று டாக்டர் சுனீதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நிபுணரின் கூற்றுப்படி, மம்மோகிராபி மற்றும் மார்பகங்களின் வழக்கமான உடல் பரிசோதனை சாத்தியமில்லாத அல்லது பொதுவானதாக இல்லாத கிராமப்புறங்களில் இது விரும்பப்படுகிறது. “மேமோகிராஃபியின் செயல்திறனை நிராகரிக்க முடியாது, ஏனெனில் இது மார்பகக் கட்டிகளை உணரும் முன்பே கண்டறிந்து, உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
சரியாக சுய பரிசோதனை செய்வது எப்படி?
சுய மார்பக பரிசோதனையின் ஒரு பகுதியாக, மார்பகங்களில் ஏதேனும் வெளிப்படையான மாற்றங்கள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உங்கள் கண்களையும் கைகளையும் பயன்படுத்தலாம். காட்சிப் பரிசோதனைக்காக, கண்ணாடியின் முன் நிர்வாணமாக உட்கார்ந்து அல்லது நின்று உங்கள் மார்பகங்களின் அளவு, வடிவம் அல்லது சமச்சீரற்ற தன்மையில் குடைச்சல், மங்கல்கள் அல்லது மாற்றங்கள் உள்ளதா எனப் பார்க்கவும்.
உங்கள் முலைக்காம்புகள் உள்ளே (தலைகீழாக) திரும்பியுள்ளதா என்பதைப் பார்க்கவும். உங்கள் கைகளை உங்கள் இடுப்பில் அழுத்தி, உங்கள் கைகளை மேலே உயர்த்தியவாறு உங்கள் மார்பகங்களை பரிசோதிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், கீழே உள்ள முகடுகள் சமச்சீராக இருக்கிறதா என்று பார்க்க உங்கள் மார்பகங்களை உயர்த்தவும்.

அடுத்து, உங்கள் மார்பகங்களை பரிசோதனை செய்ய உங்கள் கைகளைப் பயன்படுத்தவும். ஒரு தட்டையான மேற்பரப்பில் படுத்துககொண்டு-, நீங்கள் உங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டியை உணர முடியுமா என்று சோதிக்கவும். “முதலில், மார்பகத்தை பரிசோதிக்கும் போது, உங்கள் அக்குள் பகுதி மற்றும் முலைக்காம்பு போன்றவற்றை பரிசோதிக்க தவறிவிடாதீர்கள், ஏனெனில் இந்த பகுதியில் கிட்டத்தட்ட 20 சதவீத கட்டிகள் காணப்படுகின்றன” என்று டாக்டர் சுனீதா கூறினார்.
இரண்டாவதாக, சுய மார்பகப் பரிசோதனை செய்யும் போது லோஷன் அல்லது பாடி ஆயில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் இரு கைகளும் சருமமும் வறண்டு இருக்க வேண்டும். பெண்கள் மாதத்திற்கு ஒருமுறை மார்பக சுய பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. உங்களுக்கு இனி மாதவிடாய் வரவில்லை என்றால், நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள ஒவ்வொரு மாதமும் ஒரே நாளைத் தேர்வு செய்து பரிசேதனை செய்யலாம், ”என்று அவர் பரிந்துரைத்தார்.
சிவப்பு கட்டிகள் என்ன?
ஒரு கடினமான கட்டி அல்லது முடிச்சு, வீக்கம், பள்ளங்கள், வலி, புண்கள், உங்கள் முலைக்காம்பிலிருந்து வெளியேறுதல் அல்லது உங்கள் மார்பகங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். “இருப்பினும், ஒரு எச்சரிக்கைக் குறிப்பாக, உங்கள் மார்பகத்தில் மாற்றம் அல்லது கட்டியைக் கண்டறிவது பயப்படுவதற்கு ஒரு காரணம் அல்ல, மேலும் மார்பகத்தின் முரண்பட்ட பகுதிகளுடன் ஒப்பிடும் போது, இது பெரும்பாலும் சுரப்பி மார்பக திசுக்களால் ஏற்படுகிறது, இது சாதாரணமானது.
“உங்கள் மார்பகங்களில் ஏதேனும் மாற்றத்தை நீங்கள் உணர்ந்தாலோ அல்லது கவனித்தாலோ மருத்துவரைப் பார்ப்பது நல்லது என்றாலும், 40 வயதிற்குட்பட்ட பெரும்பாலான பெண்களுக்கு ஸ்கிரீனிங் மேமோகிராம் பரிந்துரைக்கப்படுவதில்லை, ஏனெனில் அவர்களின் மார்பக திசுக்கள் பொதுவாக பழைய மார்பக திசுக்களை விட அடர்த்தியாக இருக்கும். ஆனால், குடும்பத்தில் இதற்கு முன்பு யாருக்கேனும் மார்பகப் புற்றுநோயின் இருந்திருந்தால், சிறு வயதிலேயே மார்பகத்தின் எம்ஆர்ஐ மூலம் தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்0” என்று டாக்டர் சுனீதா கூறினார்.
50 முதல் 74 வயதுக்குட்பட்ட மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சராசரி ஆபத்தில் உள்ள பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மேமோகிராம் செய்ய வேண்டும். 40 முதல் 49 வயதுடைய பெண்கள் எப்போது தொடங்க வேண்டும், எவ்வளவு அடிக்கடி மேமோகிராம் எடுக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவரிடம் பேசி தெரிந்துகொள்வது அவசியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“