குறைந்த விலையில் மத்திய அரசு சுகர் மாத்திரை... உங்க பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க!

நாடு முழுவதும் 8700 இடங்களில் செயல்பட்டு வரும் பிரதமர் மக்கள் மருந்தகங்களில், 1600-க்கு மேற்பட்ட தரமான மருந்துகள் மற்றும் 250 மருத்துவ உபகரணங்கள் மலிவு விலையில் விற்கப்படுகின்றன.

நாடு முழுவதும் 8700 இடங்களில் செயல்பட்டு வரும் பிரதமர் மக்கள் மருந்தகங்களில், 1600-க்கு மேற்பட்ட தரமான மருந்துகள் மற்றும் 250 மருத்துவ உபகரணங்கள் மலிவு விலையில் விற்கப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குறைந்த விலையில் மத்திய அரசு சுகர் மாத்திரை... உங்க பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க!

தற்போதைய காலகட்டத்தில் மாறி வரும் உணவு பழக்க வழங்கங்களின் காரணமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக நீரிழிவு நோய் மாறிவிட்டது. உடல் இரத்தத்தில் சர்க்கரையின் சமநிலை தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது.

Advertisment

இதை கட்டுப்படுத்த இயற்கை உணவுகள் பல இருந்தாலும், ஆங்கில மருத்துவத்தை நாடிச்செல்லும் நபர்களும் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு புதிய மகிழ்ச்சியாக செய்தியாக நிரிழிவு நோய்க்கான மலிவு விலை மாத்திரைகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது

இது குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் சிட்டாகிளிப்டிக் 50 மில்லி கிராம் உள்ள 10 மாத்திரைகள் ரூ60-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  100 மில்லிகிராம் கொண்ட இதே மாத்திரை 10 ரூபாய் 100-க்கு கிடைக்கும். அதேபோல் சிட்டாகிளிப்டின் மற்றும் மெட்பார்மின் ஹைட்ரோளோரைட் கலந்த 50 மில்லிகிராம் மற்றும் 500 மில்லிகிராம் கொண்ட 10 மாத்திரை ரூ65-க்கும், 1000 மில்லிகிராம் கொண்ட 10 மாத்திரை ரூ 70-க்கும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மேலும் இந்த மாத்திரைகள் தற்போது ரூ162-முதல் ரூ 258 வரை செலவு செய்து 10 மாத்திரைகள் வாங்கிக்கொள்ளலாம் என்றும், பிரதமர் மக்கள் மருந்தகங்களில் இந்த மாத்திரைகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 8700 இடங்களில் செயல்பட்டு வரும் பிரதமர் மக்கள் மருந்தகங்களில், 1600-க்கு மேற்பட்ட தரமான மருந்துகள் மற்றும் 250 மருத்துவ உபகரணங்கள் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. அதேபோல் இங்கு ஒரு சானிட்டரி நாப்கின் ஒரு ரூபாய் மட்டுமே என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: