இந்தியாவில் சமையலறை மூலிகை பொருட்கள் நிறைந்திருக்கும் ஒரு மினி மருத்துவமனை என்று கூறலாம். அந்த அளவிற்கு சமையலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் மருத்துவத்தில் பெரிய நன்மைகளை அளிக்கிறது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழிக்கு ஏற்ப சமையலில் பயன்படுத்தப்படும் சிறிய பொருட்கள் கூட உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த சமையல் மசாலா பொருட்களில் முக்கியமானது கொத்தமல்லி விதைகள் (தானியா). சற்று காரத்தன்மை கொண்ட கொத்தமல்லி சமையலுக்கு மட்டுமல்லாமல், பல நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இந்திய உணவு வகைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி விதை, உணவிற்கு தனித்துவமான நறுமணத்தை கொடுக்கிறது.
இது தவிர, மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கொத்தமல்லி விதையில், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதன் காரணமாக சுகாதார நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கொத்தமல்லி விதைகளை மசாலா, மூலிகை தேநீர், காதா மற்றும் பலவற்றில் சேர்க்க பரிந்துரைக்கின்றனர். சமீபத்தில் ஆயுஷ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கோவிட்-19 வழிகாட்டுதலில் கொத்தமல்லி விதை முக்கிய இடம்பெற்றுள்ளது. கொத்தமல்லி விதை கலந்த வெதுவெதுப்பான நீரை ஆரோக்கியமான உணவுப் பழக்கமாக பரிந்துரைக்கிறது.
பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான லூக் குடின்ஹோ தானியா-நீரின் நன்மைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தானியா கலந்த தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். அதன் பலன்களையும் குறிப்பிட்டு, ஒருவர் ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் தானியா தண்ணீரை அருந்தலாம் என்றும் கூறினார்.
தானியா தண்ணீரின் 5 ஆரோக்கிய நன்மைகள்:
கீல்வாத வலியைக் குறைக்கவும்.
உடலில் நீர் தேங்க உதவுகிறது.
சிறுநீரகத்தை நச்சு நீக்க உதவுகிறது.
இது உடலுக்கு சூப்பர் குளிர்ச்சி மற்றும் வெப்பத்தை வெல்ல உதவுகிறது.
முகம் வீங்குவதைத் தடுக்கிறது.
கொத்தமல்லி தண்ணீர செய்வது எப்படி?
1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொத்தித்து பாதியாக குறைந்து நிறம் மாறியவுடன், எடுத்து வடிகட்டி பருகலாம்.
இது தொடர்பா லூக் கவுடின்ஹோ கூறுகையில்,, "உங்கள் சிறுநீரகம் தொடர்பான கடுமையான மருத்துவப் பிரச்சனைகள் இருந்தால், இந்த தண்ணீரை எடுத்துக்கொள்ளும் முன், உங்கள் சுகாதார நிபுணர்களிடம் தெரிவிக்கவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil