Tamil Health Cumin And Carom Seeds Benefits : அசிடிட்டி அல்லது வீக்கம் ஆகிய பிரச்சனைகள் ஒவ்வொருவரும தங்களது வாழ்வில் ஒருமுறையாவது சந்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக பாரம்பரிய மருத்துவ முறையை எடுத்துக்கொள்ளலாம். இந்த வயிறு தொடர்பான பிரச்சினைகள் பலருக்கும் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் அமைய வாய்ப்புகள் உள்ளது. அசிடிட்டி அல்லது அமில ரிஃப்ளக்ஸ் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலுக்கு சேராத உணவை உட்கொள்வது மற்றும் கனமான உணவை சாப்பிட்டவுடன் படுத்துக்கொள்வது.
இந்த அசவுகரியமான சூழ்நிலையிலிருந்து நிவாரணம் பெற, பெரும்பாலான மக்கள் ஆங்கில மருத்துவத்தை நாடிச்செல்வார்கள். இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற ஒரு இயற்கை வழி உள்ளது, இரண்டு இயற்கை பொருட்களை வைத்து ஆரோக்கியமான நிவாரணத்தை தயார் செய்யலாம். இந்த இரண்டு பொருட்களும், அசிடிட்டி மலச்சிக்கலின் மூல காரணத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பானம் சீரகம் (ஜீரா) மற்றும் ஓமம் விதைகள் (அஜ்வைன்) ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பானம் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதை தயாரிப்பதும் எளிதான ஒன்று.
தேவையான பொருட்கள்:
ஒரு கிளாஸ் தண்ணீர்
சீரகம் (ஜீரா) 2 தேக்கரண்டி
ஓமம் விதைகள் (அஜ்வைன்) 1 தேக்கரண்டி
செய்முறை:
சீரக விதைகள் மற்றும் ஓமம் விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து ஒரே இரவில் ஊறவைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டி, அதனை குடிக்கவும். மற்றொரு முறை தண்ணீரை பாதியாகக் குறைக்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் தேநீர் போல உட்கொள்ளவும். இதில் சுவை அதிகரிக்க சிறிது துருவிய இஞ்சி மற்றும் எலுமிச்சை சேர்த்து பருகலாம்
இந்த தண்ணீர் எப்படி வேலை செய்கிறது?
ஓமம் விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன மற்றும் நீண்ட காலமாக மருந்துகளைத் தயாரிக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஓமம் தண்ணீர் உங்கள் வயிறு மற்றும் கருப்பையை சுத்தம் செய்ய உதவுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது கூட நல்லது.
சீரக விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. சீரக தண்ணீர் உடலில் உள்ள நச்சு கூறுகளை அகற்ற உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil