Tamil Health Diabetes Patients Sexual Health Update In tamil ஆண் உறுப்பு எழுச்சி குறைபாடு; சுகர் காரணமா? மருத்துவர் விளக்கம் | Indian Express Tamil

ஆண் உறுப்பு எழுச்சி குறைபாடு; சுகர் காரணமா? மருத்துவர் விளக்கம்

நீரிழிவு பாதித்த 83% ஆண்களுக்கு விரைப்புத் தன்மையற்று, விந்தணுக்களில் குறைபாடு, விந்து முந்துதல், பிரச்சனைகள் ஏற்படுவதால், உடலுறவு குறித்த உணர்ச்சிகள் குறைந்து விடுவதாக சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆண் உறுப்பு எழுச்சி குறைபாடு; சுகர் காரணமா? மருத்துவர் விளக்கம்
10 பெண்களில் 3 பேர் பாலியல் தொடர்பான தனிப்பட்ட துயரங்களை சந்திக்கின்றனர்.

நீரிழிவு நோய் மற்றும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான காரணங்கள்

நீரிழிவு நோய் பெண்களை விட ஆண்களை தான் அதிகமாக பாதிக்கிறது. அதிலும் ஆண்களை தாக்கும் போது, அவர்களின் உடல் உறுப்புகளில் அதன் பாதிப்புகள் பரவி, அவர்களின் ரத்த நாளங்கள் பழுதடைந்து, அவை விரைவில் சிதைந்து விடுகிறது.

இதனால்  நீரிழிவு  பாதித்த 83% ஆண்களுக்கு விரைப்புத் தன்மையற்று, விந்தணுக்களில் குறைபாடு, விந்து முந்துதல், பிரச்சனைகள் ஏற்படுவதால், உடலுறவு குறித்த உணர்ச்சிகள் குறைந்து விடுவதாக சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதுவே பெண்களுக்கு நீரிழிவு தாக்கம் ஏற்படும்பட்சத்தில், அவர்களின் பிறப்புறுப்பு வழவழப்புத் தன்மை இழந்து வறட்சியுற்று, நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

தற்போது நடுத்தர வயதைத் அடைந்த ஆண் மற்றும் பெண்களுக்கு தான் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள். நீரிழிவு நோயானது, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களை தான் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாக்கின்றது. மேலும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாமல் இருந்தால், ஆண்மைக் குறைவு பிரச்சனைகள் நிச்சயம் உண்டாகும் என்கின்றனர்  சிறப்பு மருத்துவ  ஆராய்ச்சியாளர்கள்.

மேலும், ஆண்கள் புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன அழுத்தம், வேலைச்சுமை, அதிகமாக ஓய்வெடுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் ஆண்களை நீரிழிவு நோய் அதிகமாக பாதிக்கிறது. சர்க்கரை அளவு குறித்து  சித்த  மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொண்டால் எவ்வித சிக்கலுமின்றி ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.

ஆண்களுக்கு பல காரணிகளில் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது. நீரிழிவு  கட்டுப்படுத்தும் தன்னையும் இல்லாமல் இருப்பது,  நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தும் ஆங்கில மருந்துகள்,  மாத்திரைகள் மற்றும் இன்சுலின்  ஊசி. எனவே நீரிழிவு நோய் பாதிப்பில் உள்ள நபர்கள் சித்த மருத்துவ மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நபர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் உள்ளனர்

ஆங்கில மருந்துகளை போல அல்லாமல்  சித்த மருத்துவம் ஒவ்வொரு  செல்களில்  உள்ள இன்சுலின் ரெசிப்டரில் வேலை செய்கிற நிலைதான் இதற்கு முக்கிய காரணம். பெயர் வெளியிட விரும்பாத ஒரு நபர் கடந்த 23 ஆண்டுகளாக சித்த மருத்துவம்  மட்டுமே எடுத்துக் கொண்டு உள்ளார். இன்னும் அவருக்கு நான் மருந்தை மாற்ற வில்லை. தற்போது அவர் மிகவும் நன்றாக உள்ளார்.

அவருக்கு நீரிழிவு பாதிப்பும் கட்டுபாட்டில்  உள்ளது.  உடலும் முழு கட்டுபாட்டில் உள்ளது. இவர் எனது  மருத்துவ தொழில் ஆரம்பிக்கும் போதே  உள்ள நோயாளி ஆவார்.

புகையிலை பயன்பாடு, மதுப்பழக்கம், இதய நோய்கள், குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரான்(ஆண் ஹார்மோன்), மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தம், போதுமான தூக்கம் வராமல் போதல், உடல் பருமன், நீரிழிவு நோய் உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இரத்த குழாய்களில் அடைப்பு காயங்கள், தண்டு வடத்தை சுற்றிய பகுதிகளில் அறுவை சிகிச்சை, மருத்துவ நிலைகள்

பாலியல் ஆர்வம் குறைவு, விறைப்புத்தன்மை அடைவதில் சிரமம் விறைப்புத்தன்மையை பராமரிப்பதில் கடினம் முன்கூட்டியே அல்லது தாமதமான விறைப்புத்தன்மை பிரச்சனை வயதாகும் போது விறைப்புத்தன்மையால் பாதிக்கப்படுவது அதிகம் தான். ஆனாலும் இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. உங்களுக்கு வயதாகும் போதும் இந்த பிரச்சினை இருந்தால் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவது ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.

சித்த மருத்துவம் குழு

மருத்துவர் முத்துக்குமார்

சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும்

ஆராய்ச்சியாளர்

9344186480

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health diabetes patients sexual health update in tamil

Best of Express