அதிக முட்டை சாப்பிடுவது நீரிழிவு நோய் ஏற்படுத்துமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

Tamil Health Update : முட்டைகள் புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது. இதில் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் அதிகம்

Tamil Lifestyle Update : உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய உணவுகளில் ஒன்று முட்டை. புரதச்சத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் முட்டையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஆனாலும் தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை எடுத்தக்க்கொள்ளும ஒருவருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டள்ள இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையில், ஆராய்ச்சியாளர்கள் சீனாவின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வில் இருந்து 8,000 க்கும் மேற்பட்ட நபர்களிடம் முட்டை உட்கொள்ளலை இரத்த குளுக்கோஸ் அளவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர். மேலும் இந்த ஆய்வில், அதிக முட்டைகளை உண்ணும் நபர்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பு குறைவாகவும், அதிக சீரம் கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் அதிக கொழுப்புடன் இருப்பதை கண்டறிந்தனர்.

இது தொடர்பாக தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் (1991-2009)  ஆய்வின்படி, ஆண்களுடன் ஒப்பிடுகையில் அதிக முட்டை எடுத்ததுக்கொள்ளும் பெண்களுக்கு ஆபத்து இன்னும் அதிகமாக உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள ரசாயனங்களில் இருந்து கார்போஹைட்ரேட் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் என்றும், முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படும் கோலினில் இருந்து ஆக்சிஜனேற்றம் மற்றும் அழற்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் உணவில், முட்டை முக்கிய பங்காற்றுகிறது. இது புரதத்தின் சிறந்த மூலமாகும் மற்றும் அரை கிராம் கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது என்று குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் நேஹா பதானியா குறிப்பிட்டுள்ளார். ஆனால “முட்டை, குறிப்பாக வெள்ளைக்கரு, நமக்குக் கிடைக்கும் சிறந்த தரமான புரதமாகும். முட்டைக்கும் நீரிழிவு நோய்க்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பது சாத்தியமில்லை” என்று மும்பை பாட்டியா மருத்துவமனையின் உட்சுரப்பியல் நிபுணரும் நீரிழிவு நிபுணருமான டாக்டர் ஷைவல் சந்தலியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆராய்ச்சி “முடிவில்லாத” சில முடிவுகளை கொடுத்தாலும், முட்டை நுகர்வு அதிகரிப்பு சீனாவில் முட்டைகளின் மலிவு விலை மற்றும் ஒட்டுமொத்த மேற்கத்திய உணவுகளை நோக்கி காய்கறிகள், இறைச்சி மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து மயோ கிளினிக் கூற்றுப்படி, முட்டைகள் புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது. இதில் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் அதிகம். ஆனால் முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை மற்ற கொலஸ்ட்ரால் கொண்ட உணவுகளான டிரான்ஸ் ஃபேட்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் போன்றவற்றை அதிகரிப்பதாக கூறப்படுவதற்கு எவ்வித சான்றும் இல்லை.

இருப்பினும், முட்டைகளை மஞ்சள் கரு, வெண்ணெய், எண்ணெய் மற்றும் சீஸ் போன்ற பிற உணவுகளுடன் சேர்த்து உட்கொண்டால், அது எடை, கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முட்டையின் வெள்ளைக்கருக்கள் வரை சாப்பிடுவது ஒரு பாதுகாப்பான மற்றும், உண்மையில், நன்மை பயக்கும் அளவாகும். இந்திய சைவ உணவில் முட்டை முக்கியமானது” என்று டாக்டர் சாண்டலியா கூறினார்.

ஒரு பெரிய முட்டையில் கிட்டத்தட்ட 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது இதன் காரணமாக முட்டை நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, முட்டைகளை உண்பதற்கான சிறந்த வழி, அவற்றை வேகவைத்து, உப்பு, மிளகு மற்றும் கொத்தமல்லி இலைகளுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். அல்லது இரண்டு முட்டைகளைப் பயன்படுத்தி காய்கறிகள் சேர்த்து ஆம்லெட் செய்யலாம். மேலும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்க அளவாக சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்,” என்று பதானியா கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health egg benefits and eggs daily trigger diabetes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express