இட்லி மாவில் மெது வடை: பொங்கலுக்கு இப்படி செய்து அசத்துங்க!

Tamil Health Update : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த மெதுவடையில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலையில் ரிலாக்சாக அமரும்போது ஸ்னாக்ஸ் சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக .இருக்கும். இந்த ஸ்னாக்ஸ் ஐட்டங்களில் முக்கிய இடம் வடைக்கு உண்டு. இதிலும் மெதுவடை என்றால் சிலருக்கு அல்ல பலருக்கும் பேவரட் ஸ்னாக்சாக இருக்கும். ஏனென்றால் மெதுவடை ஸ்ன்காக்சாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியம் தரும் உணவாக உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த மெதுவடையில் மருத்துவ குணங்கள் நிறைந்த பல பொருட்களை சேர்க்கும்போது உடல் ஆரோக்கியத்தை தரும் முக்கிய மருத்துவ உணவாகவும் பயன்படுகிறது. இந்த மெதுவடை செய்வது மிகவும் எளிதானது. இதை செய்வதற்கு பல வழிகள் உள்ளது. ஆனால் இட்லி மாவை பயன்படுத்தி எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு – 2 கப்

ரவை – 11/2 ஸ்பூன்

கடலை மாவு – 3 டிஸ்பூன்

மஞ்சள்தூள் – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

பேக்கிங் சோடா – சிறிதளவு

வெங்காயம் – 1 கப்

மிளகு – 2 ஸ்பூன்

கொத்தமல்லி தழை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

வெங்காய தாள் – தேவைக்கேற்ப

அரிசிமாவு – 11/2 ஸ்பூன்

செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் காடாய் வைத்து எண்ணெய் சூடேற்றவும். அதன்பிறகு கையில் தண்ணீர் தொட்டு மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து கையில் வைத்து தட்டி எண்ணெய்க்குள் இடவும். நன்றாக வேகும் வகையில் அதனை திருப்பிவிடவும். வடை பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவையான மெதுவடை தயார்.

ஆரோக்கியம் தரும் இந்த மெதுவடை பொதுவாக சுபநிகழ்ச்சிகளில் பறிமாறும் பழக்கம் பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health evening snakes medhuvadai recipe making with idly mavu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com