Tamil Lifestyle Update : நீங்கள் அடிக்கடி சோர்வாக எழுந்திருக்கிறீர்களா?, நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகும் இதே நிலை தொடர்கிறதா? இந்த கேள்விக்கு நீங்கள் ஆம் என்று பதில் சொன்னால், உங்கள் உணவில் சிறிது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. ஏனென்றால், உங்கள் உணவில் அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள் இல்லாவிட்டால், இத்தகைய அறிகுறிகள் படிப்படியாக உங்கள் உடலில் காட்டத்தொடங்கும்.
முடி உதிர்தல், குறைந்த அளவு ஹீமோகுளோபின் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சனைகள் நீங்கள் உட்கொள்ளும் உணவோடு தொடர்புடையது. இந்த பிரச்சனைகள் உங்கள் உடலில் இருந்தால், நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். டாக்டர் டிக்ஸா பாவ்சார் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான பதிவை பகிர்ந்துகொண்டு, இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் நிவாரணம் பெற வும் செய்தார்.
"ஹீமோகுளோபின் பற்றாக்குறை முடி உதிர்தல், பலவீனம் (சோர்வு/அசாதாரண உணர்வு) மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளையும் போக்க இந்த எனர்ஜி பானத்தை தினமும் காலையில் குடிக்கவும்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் -1
கேரட் - 1
கொத்தமல்லி இலை - ஒரு கை
மாதுளை - 1
கறிவேப்பிலை – 7/8
புதினா இலை - ஒரு கைப்பிடி
இஞ்சி - 1 துண்டு -
எலுமிச்சை - ½ -
செய்முறை
அரை கிளாஸ் தண்ணீருடன் அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் கலக்கவும். வடிகட்டி ஒரு கிளாஸில் ஊற்றி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்
பலன்கள்
பைட்டோநியூட்ரியண்ட்ஸ் நிறைந்த இந்த ஜூஸ் குடல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருப்பதால் இது வளர்சிதை மாற்ற அமைப்பைத் தூண்ட உதவுகிறது.
இந்த ஜூஸ் இரத்த சுத்திகரிப்பை ஊக்குவிக்கிறது, இது தோலில் பிரதிபலிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுவதன் மூலம் வயதான தோற்றத்தில் இருந்து பாதுகாக்கிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது, எனவே உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
சுவையான இந்த ஜூஸ் இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது. இது, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பீட்ரூட் மற்றும் கேரட்டில் இதயத்திற்கு நன்மை பயக்கும் லுடீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஆல்பா உள்ளது. குறைந்தபட்ச கலோரிகளுடன், இந்த பானம் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது, அதே நேரத்தில் பசியை போக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil