Advertisment

வீட்டுல பப்பாளி மரம் இருக்கா? சுகர் பிரச்னைக்கு இதை ட்ரை பண்ணுங்க!

Tamil Health News : பப்பாளி இலைச் சாறு பொதுவாக டெங்கு காய்ச்சலுடன் தொடர்புடைய அறிகுறிகளைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீட்டுல பப்பாளி மரம் இருக்கா? சுகர் பிரச்னைக்கு இதை ட்ரை பண்ணுங்க!

Tamil Health Update Pappya Leaf Benefits : இயற்கையில் கிடைக்கும் முக்கிய மற்றும் ஆரோக்கியம் நிறைந்த மரவகைகளில் ஒன்று பப்பானி. பொதுவாக வெப்பமண்டல பகுதிகளில் வளரும் திறன்கொண்ட பப்பாளி மருத்தவ குணங்கள் நிறைந்துள்ளது. ஊட்டசத்து்ககள் நிறைந்துள்ள பப்பாளிப்பழம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் பப்பாளி மரத்தில் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

Advertisment

இதில் பழங்களுக்கு அடுத்தப்படியாக பப்பாளி மரத்தில் அதிகம் உண்ணக்கூடியது பப்பாளி இலைகள். பப்பாளி இலைச்சாறு இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதில் இருக்கும் பாப்பைன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள் செரிமானத்திற்கு உதவுகிறது. மற்றும்  வீக்கம் உள்ளிட்ட பிற செரிமான கோளாறுகளைத் தடுக்கவும் பயனபடுகிறது.

பப்பாளி இல்லையில் அதிக அளவு வைட்டமின் ஏ, சி. ஈ, கே மற்றும் பி உள்ளன. இதில்ஆல்கலாய்டு கலவை பொடுகு மற்றும் வழுக்கைக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. மேலும் பப்பாளி இலையில் தயாரிக்கப்படும் தேநீர், பழச்சாறுகள் மற்றும் மாத்திரைகள் பெரும்பாலும் பல நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

பப்பாளி இலை சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்

பப்பாளி இலைச் சாறு பொதுவாக டெங்கு காய்ச்சலுடன் தொடர்புடைய அறிகுறிகளைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, குமட்டல், தோல் வெடிப்பு மற்றும் வாந்தி ஆகிய டெங்குவின் பொதுவான அறிகுறிகளை போக்க உதவுகிறது.. மேலும் சில கடுமையான சந்தர்ப்பங்களில், இது இரத்த பிளேட்லெட் அளவைக் குறைக்கும் வாய்ப்புள்து. அப்போது இரத்தப்போக்கு அதிகரிக்கும். அதற்குள் சிகிச்சை அளிக்காவிட்டால், மரணத்திற்கு வழிவகுக்கும்.

தற்போது டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை இல்லை, பப்பாளி இலைச்சாறு என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். டெங்குவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களை உள்ளடக்கிய மூன்று ஆய்வுகள், பப்பாளி இலைச் சாறு இரத்தத் தட்டுக்களின் அளவைக் கனிசமாக உயர்த்த உதவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும்

பப்பாளி இலைச்சாறு பெரும்பாலும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்துவதற்கும் இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், பப்பாளி இலைச் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதாகவும், ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும் விளைவுகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதம் மற்றும் அகால மரணத்திலிருந்து பாதுகாப்பதறகும் பப்பாளி இலை பெரிதும் உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

வாயு, வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற செரிமான அறிகுறிகளைப் போக்க பப்பாளி இலை பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலையில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் பெரிய புரதத்தை சிறியதாகவும் ஜீரணிக்க எளிதாகவும் புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களாக உடைக்க முடியும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் தரும்

தசை வலிகள் மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட உள் மற்றும் வெளிப்புற அழற்சி நிலைகளுக்கு சிகிச்சை அளிக்க பப்பாளி இலை பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலை சாறு கீல்வாதத்துடன் கூடிய பாதங்களில் வீக்கம் மற்றும் வீக்கத்தை கணிசமாகக் குறைப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முடி வளர்ச்சியை ஆதரிக்கக் கூடியது

பப்பாளி இலைச் சாற்றை உச்சந்தலையில் தடவினால் முடி வளர்ச்சி மற்றும் முடி ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆனால் அதையே நிரூபிக்கும் சான்றுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. உடலில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் முடி உதிர்தலுக்கு தீர்வு தரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவை உட்கொள்வது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தணிக்கவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.

ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கவும்

பப்பாளி இலையை சாற்றை, சருமத்தில் தடவினால் மென்மையான மற்றும் சுத்தமான சருமம் கிடைக்கும். இது பாப்பைன் எனப்படும் புரதத்தை கரைக்கும் நொதியைக் கொண்டுள்ளது, இது ஒரு எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது. தூசி மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இது அடைபட்ட துளைகள், மற்றும் முகப்பரு ஏற்படுவதைக் குறைக்கவும் உதவுகிறது.

புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது

பப்பாளி இலை பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளில் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதை உறுதிப்படுத்த இன்னும் ஆராய்ச்சி தேவை. சோதனைக் குழாய் ஆய்வுகளில் புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திவாய்ந்த திறனை பப்பாளி சாறு கொண்டுள்ளது. ஆனால் மனித அல்லது விலங்கு ஆய்வுகள் இந்த கண்டுபிடிப்புகளை பிரதிபலிக்கவில்லை.

பப்பாளி இலை சாறு செய்வது எப்படி

சாறு தயாரிக்க, உங்களுக்கு சில புதிய பப்பாளி இலைகள் மற்றும் தண்ணீர் தேவை. இலையை நறுக்கி, முட்டைக்கோஸை நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தால் பப்பாளி இலை சாறு தயார். டெங்குவின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒருவர் 100 மில்லி பப்பாளி இலைச்சாற்றை மூன்று பகுதிகளாக எடுத்துக் கொள்ளலாம். சாறு சுவையாக இருக்க, நீங்கள் சிறிது உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Diabetes Benefits Of Papaya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment