scorecardresearch

சிறு துண்டு மஞ்சள் இரவில் ஊறவைத்து… சுகருக்கு செலவே இல்லாத சூப்பர் தீர்வு!

Tamil Health Update : ஒருவர் தனது உணவை சரியாகக் கவனித்து, எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

சிறு துண்டு மஞ்சள் இரவில் ஊறவைத்து… சுகருக்கு செலவே இல்லாத சூப்பர் தீர்வு!

உலகளில் பெரும்பாலான மக்கள் தற்போது சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று நீரிழிவு நோய். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரழிவு நோய் ஏற்படுகிறது. உலக நீரழிவு சம்மேளனத்தில் அறிக்கை படி, உலகளவில் 463 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த நோயை கட்டுப்படுத்த முறையான மருந்துகள் அறிவுறுத்தப்பட்டாலும், உணவு பொருட்களில் சில அடிப்படை மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாத நிலை என்பதால், ஒருவர் தனது உணவை சரியாகக் கவனித்து, எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

நீரிழிவு நோயாளிகள், புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சமநிலை உள்ள உணவை எடுத்தக்கொள்வது நல்லது. சர்க்கரை, டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் அதிக கலோரி உணவுகளை ஒருவர் தவிர்க்க வேண்டும். அதிலும் பாரம்பரிய மசாலா மற்றும் மூலிகைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். குறிப்பாக எளிதில் கிடைக்கும் மஞ்சள் பல்வேறு நிலைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தருகிறது.

மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள்:

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பிரலமான மசாலா பொருட்களில் ஒன்றாக மஞ்சள், ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளின் களஞ்சியமாகும், இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் இன்சுலின் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளின் விளைவை அதிகரிக்க உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, நரம்பியல் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற பல உடலியல் மற்றும் மருந்தியல் பண்புகளை வெளிப்படுத்துகிறது.” குர்குமா லாங்கா அல்லது குர்குமினின் பயன்பாடு “லிப்பிட் பெராக்சிடேஷன், இரத்த குளுக்கோஸ் அளவுகள், கிளைகேட்டட் ஹீமோகுளோபின் (HbA1C), ட்ரைகிளிசரைடுகள், மொத்த கொழுப்பு, எல்டிஎல்-சி, சி-ரியாக்டிவ் புரோட்டீன், சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு நன்மை தருகிறது.

நீரிழிவு நோய்க்கான மஞ்சள் தேநீர்: மஞ்சள் தேநீர் செய்வது எப்படி:

 நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவில் மஞ்சளைச் சேர்க்க எளிதான மற்றும் பயனுள்ள வழி இருக்கிறது. ஒரு கப் மஞ்சள் தேநீர்  உங்களுக்கு பெரிய நன்மைகளை அளிக்கும்.

இரவில் அரை அங்குல பச்சை மஞ்சளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும்.

காலையில் அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வைத்து, அதை வடிகட்டி குடிக்கவும்.

இதில் கூடுதலாக இஞ்சி மற்றும் கருப்பு மிளகு தேன் ஆகியவற்றை சேர்த்தால், கூடுதல் நன்மை கிடைக்கும். இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் தேன் சேர்ப்பதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது  இந்த ஆரோக்கியமான மஞ்சள் தேநீரை உங்கள் நீரிழிவு உணவில் சேர்த்து, ஒட்டுமொத்த பலனை அனுபவிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health food tea for diabetes patients in tamil update