அதிக உயிர்ச் சத்து… தானியங்களை முளை கட்டுவது எப்படி?

Tamil Health Update : தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் இயற்கையில் கிடைக்கும் பொருட்களின் முக்கியத்துவத்தை அறிந்து உடல் ஆரோக்கியத்திற்காக அதனை பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர்.

Tamil Lifestyle Update In Tamil : மாறி வரும் உணவு பழக்க வழக்கம் மற்றும் சூற்றுச்சூழல் மாறுதல் காரணமாக பலவகையான நோய் தொற்றுகள் தாக்கி வருகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றின் செயல்திறன் என்பது உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. இதனால் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து மனிதனின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் இயற்கையில் கிடைக்கும் பொருட்களின் முக்கியத்துவத்தை அறிந்து உடல் ஆரோக்கியத்திற்காக அதனை பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர். இதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல இயற்கை பொருட்கள் உள்ளனர். அதில் முக்கிய இடம்பெற்றுள்ளது தானியங்கள். இயற்கையில் கிடைக்கும் தானியங்கங்கள் மற்றும் பயறு வகைகள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகள் தரக்கூடியவை.

பொதுவாக தானியங்கள் உடலுக்கு அதிக புரதச்சத்தை அளிக்கக்கூடியது. ஒவ்வொரு தனியமும் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் அதிக நன்மைகள் தரக்கூடியது. உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும், மற்றும் பல கொடிய நோய்களுக்கும் தானியங்கள் ஒரு சிறந்த நிவாரணமாக பயன்படுகிறது. இந்த தானியங்களை பச்சையாகவும் வேக வைத்து சாப்பிடலாம். தானியங்களை நமது தினசரி உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு அனைத்து சக்திகளும் கிடைக்கப்பெறும்.  

இவ்வகை தானிங்களை நாம் பச்சையாக மற்றும் வேகவைத்து சாப்பிட்ட அனுபவம் இருக்கும். ஆனால் இந்த தானியங்களை முளைக்கவைத்து அதை சாப்பிட்ட அனுபவம் பலருக்கும் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். பழங்காலத்தில் மிகவும் பிரபலமான இந்த உணவு தற்போது கிராமங்களில் அதிகம் உண்ணப்படுகிறது. தானியங்களை முளைக்கவைத்து அந்த முளைக்கட்டியுடன் சாப்பிடும் போது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அதிகப்படியான உயிர் சக்தியை மிக எளிதாக பெறமுடியும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற இந்த முளைக்கட்டிய தானியத்தில், உள்ள என்சைம்ஸ், என்ற புரதம் ஒருவரின் வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மைகொண்டது. இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் வைட்டமின் ஏ, பி1, பி2 போன்ற பலவகை சத்துக்கள் அடங்கியுள்ளன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முளைக்கட்டிய பயறு சிறந்த நிவாரணமாக உள்ளது. எந்தவித  நோய்களும் வராமல் தடுக்கும் சக்தி கொண்ட முளைக்கட்டிய பயறில்,வைட்டமின் சி என்ற உயிர் சத்து மிக அதிக அளவில் பெற முடியும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்த முளைக்கட்டிய தானியத்தை எப்படி உருவாக்குவது?

தானியத்தை முளைகட்ட விடுவது எளிமையான ஒரு செயல்முறை. தானியத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து சுத்தமான பாத்திரத்தில் இரவு முழுவதும் (சுமார் 12 மணி நேரம்) உறவைக்கவும். அடுத்தநாள் ஊறிய பயிரின் நீரை வடிகட்டி, ஒரு சுத்தமாக மெல்லிய துணியில் நன்று இறுக்கமாக கட்டி நல்ல காற்றோட்டமான இடத்தில் தொடங்கவிட வேண்டும்.

சுமார் எட்டு மணிநேரத்தில் சிலமுறை அதில் தண்ணீர் தெளித்து வரவேண்டும் அப்போதூன் முளைப்பு காய்ந்து விடாமல் நன்றாக இருக்கும். அந்த எட்டு மணி நேரம் கழித்து அதை எடுத்து பார்த்தால், துணிக்கு மேலே பயிரின் முளைகட்டு வெளியில் தெரியும். இந்த முளைவிட்டதானியங்கள் மற்றும் பயறு வகைகளை அப்படியே பச்சையாக சாலட்டாக செய்து சாப்பிடலாம் அல்லது வேகவைத்தும் சாப்பிடலாம் இரண்டு வழிகளுமே உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மைகள் தரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health grain sprouts benefits and making update

Next Story
தங்கை, வில்லா, கேக் – விஜய் டிவி சுனிதா பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ!Vijay Tv fame Sunita Birthday Celebration Viral Video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com