Tamil Health Green Tea Benefits : உடலுக்கு அதிக நன்மைகள் தரக்கூடிய முக்கிய பாணங்களில் ஒன்று கிரீன் டீ. உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்கும் கிரீன் டீ நீண்ட நாட்கள் இளமையுடன் வாழ உடலை ஆரோக்கியமாக வைக்ககிறது. உடல் நலத்தை பல வகைகளில் மேம்படுத்தும் இந்த கிரீன் டீ இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. இரத்த நாள நோய் மற்றும் பக்கவாதம் அபாயத்தை குறைக்கிறது. மேலும் உடல எடை குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது.
எடை குறைப்புக்கு கிரீன் டீ சாப்பிடுவதற்கான சரியான நேரம் மற்றும் வழி
க்ரீன் டீ இல்லாமல் எடை குறைப்பு திட்டம் முழுமையடையாது என்று சொல்லலாம். ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டி கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்ட ஒரு ஆய்வில், கிரீன் டீ உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் மோசமான ஆரோக்கியத்துடன் தொடர்புடைய அழற்சி பயோமார்க்ஸர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.
எட்டு வாரங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவு விலங்குகளை இரண்டு குழுக்களாக பிரித்து பாதி விலங்குகள் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் உயர் கொழுப்பு உணவையும், மீதி பாதிக்கு வழக்கமான உணவும் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ஒவ்வொரு குழுவிலும், உள்ள விலங்குகளுக்கு உடல் கொழுப்பு திசு எடை, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பிற காரணிகள் அனைத்து அளவிடப்பட்டன.
இதில் கிரீன் டீ இல்லாமல் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுவதை காட்டிலும் கிரீன் டீயுடன் கூடிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட விலங்குகள் 20 சதவிகிதம் குறைவான உடல் எடையைப் பெற்றதாகவும், இன்சுலின் எதிர்ப்பு குறைவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. மேலும் இந்த க்ரீன் டீ, குடலில் இருந்து இரத்த ஓட்டத்தில் நுழையும் நச்சு பாக்டீரியாக் கூறுகளான எண்டோடாக்சின் இயக்கத்திற்கு எதிராகப் போராடுகிறது.
கிரீன் டீ வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கிறது. மற்றும் வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கிறது கிரீன் டீ நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, இது உடல் பருமன் குறையும் அபாயம் உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வு காட்டுகிறது.
நீங்கள் எவ்வளவு குடிக்க வேண்டும்?
ஓஹியோ பல்கலைக்கழக வல்லுநர்கள் ஒருவர் கிரீன் டீ தண்ணீரைப் போல உட்கொள்ளக்கூடாது என்றும், நாள் முழுவதும் சிறிது சிறிதாக எடுத்துக்கொள்வது முழு நன்மையும் கிடைகக வழி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil