scorecardresearch

சுகர் பேஷண்ட்களுக்கு இதுதான் தோஸ்த்… தினமும் நீங்க எத்தனை பாதாம் சாப்பிடணும் தெரியுமா?

Tamil Health : நாள் தொடங்கும் முன் அல்லது மாலை தேநீர் நேர சிற்றுண்டியாக கூட ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிடடுவது நல்லது

சுகர் பேஷண்ட்களுக்கு இதுதான் தோஸ்த்… தினமும் நீங்க எத்தனை பாதாம் சாப்பிடணும் தெரியுமா?

Tamil Health Update : ஆரோக்கியம் பருப்பு வகைகளில் முக்கியமான இடத்தை பெற்றுள்ள பாதாம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முதல் ஆரோக்கியமான கொழுப்புகள் வரை ஊட்டச்சத்துக்களின் சக்தியாக உள்ளது. பகலில் பசியை கட்டுப்படுத்தும் ஒரு சத்தான சிற்றுண்டி இருக்கும் பாதாம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும்,, இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் பெரிய நன்மைகளை அளிக்கிறது.

மேலும் மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள் மற்றும் இரத்த சோகை ஆகிய நோய்களுக்கு எதிராக போராடும் திறன் கொண்டுள்ள பாதாம், முடி, தோல் (சொரியாசிஸ்) மற்றும் பல் பராமரிப்புக்கு நன்மை தருவதாக  உள்ளது. இவவளவு நன்மை தரும் பாதாமை அளவுக்கு அதிகமா எடுத்துக்கொள்வது தீமையை தரும்.

ஒரு நாளைக்கு ஒருவர்ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிட்டால் போதும்., என்று ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நிபுணர் ஷீலா கிருஷ்ணசாமி வலியுறுத்துகிறார். “ஒருவர் தினசரி உணவில் முடிந்தவரை பல ஆரோக்கியமான பொருட்களைச் சேர்க்கும் வகையில் உணவுப்பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.

உங்கள் ஆரோக்கியத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, பின்னர் உடலை நோய்களிலிருந்து நீங்கள் இன்னும் அதிகமாகக் காப்பாற்றப்படலாம், ”என்று கிருஷ்ணசாமி indianexpress.com இடம் கூறியுள்ளார்.

பாதாம் உங்கள் உணவில் சேர்க்க எளிதான உணவுகளில் ஒன்றாகும். நாள் தொடங்கும் முன் அல்லது மாலை தேநீர் நேர சிற்றுண்டியாக கூட ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிட  பரிந்துரைக்கிறார். நீங்கள் சமைக்கும் உணவிலும் பாதாமை சேர்க்கலாம். சமீபத்திய ஆய்வின்படி, உங்கள் அன்றாட உணவில் 45 கிராம் பாதாம் சேர்த்துக்கொள்வது எல்.டி.எல் (கெட்ட கொழுப்பை) குறைக்கவும், டிஸ்லிபிடெமியா போன்ற நிலைமைகளைப் போக்கவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.  

பாதாமுடன் மற்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சேர்க்கும்பொது எல்டிஎல் மற்றும் மொத்த கொழுப்பைக் குறைக்க திறம்பட உதவும், இதனால் நீண்ட காலத்திற்கு உங்களை ஆரோக்கியமாக ஆக்குகிறது, ”அவர் கூறியுள்ளார்.

ஒரு கைப்பிடி பாதாமில், உங்களுக்கு ஆறு கிராம் புரதம், 3.5 கிராம் நார்ச்சத்து மற்றும் 75 மில்லிகிராம் கால்சியம் மட்டுமல்லாமல், 13 கிராம் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களையும் தகுகிறது.. இவை மொத்த கொலஸ்ட்ரால் மற்றும் எல்டிஎல் குறைக்க உதவும் இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

பாதாம் முழுமையின் உணர்வை ஊக்குவிக்கும் திருப்திகரமான பண்புகளைக் கொண்டுள்ளது, மேலும் பசியின்மையைப் போக்குவதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவுகளில் இருந்து உங்களை பாதுகாகக உதவுகிறது.

பைலேட்ஸ் நிபுணர் மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் மாதுரி ரூயா, indianexpress.com இடம் கூறுகையில்,”பாதாம் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் ஆரோக்கியமான ஆற்றல் மூலம்., மேலும் வைட்டமின் ஈ, கால்சியம், நல்ல கொழுப்பு, உணவு நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் இயற்கை மூலமாகும். நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் தாவர புரதம்.”

“பாதாம் போன்ற பருப்புகள் ஆரோக்கியமான சிற்றுண்டித் தேர்வாகும், குறிப்பாக எடையைக் குறைக்க மற்றும் பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு பாதாம் சிறந்த உணவாக உள்ளது. ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, ஒவ்வொரு நாளும் 43 கிராம் உலர், வறுத்த, லேசாக உப்பு சேர்க்கப்பட்ட பாதாம் பருப்புகளை உட்கொண்ட பங்கேற்பாளர்கள் பசியைக் குறைத்து, வைட்டமின் ஈ மற்றும் மோனோசாச்சுரேட்டட் (“நல்ல”) கொழுப்பு உட்கொள்ளலை அதிகரித்துள்ளதாக ரூயா கூறியுள்ளார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health how many almonds should you consume daily