/tamil-ie/media/media_files/uploads/2022/10/Ringworm.jpg)
தோலில் ஏற்படும் நோய்களில் முதன்மையானது படர் தாமரை. பூஞ்சையினால் ஏற்படக் கூடிய தொற்று. பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும். பிறப்புறுப்பில் துவங்கி, தொடை இடுக்குகளில் பரவும் இந்த நோயால் சொறியப்படும் இடம், சினைப்புகள் சிவந்திருக்கும். படர்தாமரை பரவிய இடங்களில், தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கறுப்பு நிறமாகிவிடும்.
தீராத அரிக்கும் தன்மை உடையது. இதை சொறிந்துவிட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால், மற்ற பாகங்களுக்கும் பரவும். படர்தாமரை, தலையில் தாக்கினால், அரிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி பாதிக்கப்பட்டு, சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அதிகரிக்கும். உடலில் எங்கு வேண்டுமானாலும், இந்த படர்தாமரை வரும்.
பாக்டீரியா தாக்குதல், நகத்தில் சிதைவை ஏற்படுத்தும். கால் விரல் நகங்களில் அதிகம் வரும். அவ்வப்போது கால் விரல்களை கவனித்து நகங்களை வெட்டிவிட வேண்டும். படர்தாமரை ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு தொற்றிக் கொள்ளும் சரும வியாதி. அந்த நுண்ணுயிர்களுக்கு பிடித்த ஈரமான இடம் கால் விரல்களின் இடுக்கு.
இது, முதலில் சிறு பகுதியில் தாக்கி, பாதம் முழுவதும் புண்ணாகும். படர் தாமரை பரவும் இடங்கள் அக்குள், பிறப்புறுப்பு, தொடை, தொடை இடுக்குகள், கால் நகங்கள், கழுத்து மடிப்பு கால் இடுக்குகள், பெண்களுக்கு மார்பகங்களின் கீழ் சதை மடிப்புகளில் வரும்.
படர்தாமரை தாக்காமல் இருக்க, காலை, இரவு என, இரு வேளைகளிலும், சுத்தமான நீரில் குளிக்க வேண்டும். அழுக்கு துணிகளை பயன்படுத்தக் கூடாது. சலவை செய்த துணிகளையே பயன்படுத்த வேண்டும். இவற்றை பின்பற்றினால் படர்தாமரையை ஒழிக்க முடியும்.
சித்த மருத்துவம் குழு
மருத்துவர் முத்துக்குமார்
சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
9344186480
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.