இம்யூனிட்டி, ஜீரண சக்தி… 50 கிராம் பைனாப்பிள் போதும்; சாப்பிடும் முறை ரொம்ப முக்கியம்!

Tamil LIfestyle Update : அன்னாசிப்பழம், மிகவும் சுவையான இருப்பதோடு மட்டுமல்லாமல், உணவு செரிமானம் மற்றும் இதர பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளது

Pineapple Benefits In Tamil : வளர்ந்து வரும் விஞ்ஞான காலத்தில் புதிய நோய்களும், அதற்கு புதிய மருந்துகளும் கண்டுபிடிப்பது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. என்னதான் பலரும் ஆங்கில மருத்துவத்தில் மூழ்கி இருந்தாலும், இயற்கையில் கிடைக்கும் பழங்கள் காய்கறிகள், கீரைகள் என பல உணவுப்பொருட்கள் ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக நன்மைகள் தரக்கூடிய வகையில் உள்ளது. அந்த வகையில் இயற்கையில் கிடைக்கும் அன்னாசிப்பழம்  பல நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

வெப்பமண்டல பழமாக இருக்கும் அன்னாசிப்பழம், மிகவும் சுவையான இருப்பதோடு மட்டுமல்லாமல், உணவு செரிமானம் மற்றும் இதர பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளது. இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கினிதா கடகியா படேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அன்னாசி பழத்தில் காணப்படும் ஒரு நொதி செரிமானத்திற்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ப்ரோமெலைன் என்ற அந்த நொதி  நிறைய செரிமான பிரச்சினைகளுக்கும் உதவுகிறது, என்று அவர் கூறினார்.

இந்த நொதி புரத மூலக்கூறுகளை அமினோ அமிலங்கள் மற்றும் சிறிய பெப்டைட்களாக உடைக்கிறது, இவை சிறுகுடல் முழுவதும் எளிதில் உறிஞ்சப்பட்டு நன்மைகள் அதிகம் தரக்கூடியதாக உள்ளது. மேலும் அன்னாசிப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளதால், இது “சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு” ஆக செயல்படுகிறது, என்றும்  கூறியுள்ளார்.

பழம் மட்டுமல்ல, பழத்தின் கடினமான தோலும் நன்மைகளுடன் நிறைந்துள்ளது. ப்ரோமெலைன் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைத் தவிர, தோலில் மாங்கனீசு நிறைந்திருப்பதால் பற்கள் மற்றும் எலும்பு வலுவூட்டல் போன்ற நன்மைகளை தருகிறது. உங்கள் சாலட்டில் சிறிது அன்னாசி துண்டுகளை சேர்த்து அதில் சுமார் 50 கிராம் அன்னாசிப்பழத் தோலை, சேர்க்க சேர்த்து சாப்பிடலாம். அல்லது அன்னாசி தோலை தயிரில் சாப்பிடலாம் என்றும் கினிதா பரிந்துரைத்தார். ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி இது “அன்னாசிப்பழம் சாப்பிட சிறந்த வழி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health immunity health benefits for pineapple fruit

Next Story
ஆட்டுப்பால் எண்ணெய், முல்தானி மட்டி, கீட்டோ டயட் – அபி டைலர் ரேஷ்மா பியூட்டி சீக்ரெட்ஸ்!Abi Tailor Serial Actress Reshma Muralidaran Beauty secrets Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com