உஷார் பெண்களே... மார்பக காம்பு, இடுப்பு பரிசோதனை முக்கியம்!

கொழுப்பின் அளவையும் சோதித்துப் பார்க்க வேண்டும். 20 வயதுக்கு மேற்பட்ட எவரும் தங்கள் கொழுப்புச்சத்து எண்ணைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கொழுப்பின் அளவையும் சோதித்துப் பார்க்க வேண்டும். 20 வயதுக்கு மேற்பட்ட எவரும் தங்கள் கொழுப்புச்சத்து எண்ணைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உஷார் பெண்களே... மார்பக காம்பு, இடுப்பு பரிசோதனை முக்கியம்!

20 அல்லது 30 வயது பெண்களுக்கு மருத்துவ சோதனை

எடை பார்த்தல்: உடல் எடை கூடுதல் பிற்கால வாழ்க்கையில் பலவிதமான நோய்கள் உண்டாகும் ஆபத்து இருப்பதால் அடிக்கடி எடை பார்ப்பது அவசியம்.

இரத்த அழுத்தம்: எளிதாகவும், விரைவாகவும் அதிக செலவின்றியும் அளக்கலாம்.

Advertisment

கொழுப்பின் அளவு: கொழுப்பின் அளவையும் சோதித்துப் பார்க்க வேண்டும். 20 வயதுக்கு மேற்பட்ட எவரும் தங்கள் கொழுப்புச்சத்து எண்ணைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை சோதனை செய்யவும் வேண்டும்.

பெண்களுக்கு மட்டும்: மார்பக, இடுப்பு மற்றும் மார்புக் காம்பு சோதனை. மார்பக மற்றும் 10 நிமிடம் அசௌகரியத்தை அளிக்கும் இடுப்பு சோதனைகளால் பெரும் நன்மைகள் விளையும். புற்று நோயில் இருந்தும் மலட்டுத் தன்மையை விளைவிக்கும் நோய்களில் இருந்தும் காக்கும். அசாதாரணமான மார்புக் காம்புகள் இருந்திருந்தால் மருத்துவர் ஆலோசனையுடன் மார்புக்காம்பு சோதனை செய்யவும். அந்த பிரச்சினை இல்லை என்றால் ஓராண்டுக்குப் பதிலாக மூன்றாண்டுக்கு ஒருமுறை இப்பரிசோதனை செய்யலாம்.

கண்களைப் பாதுகாத்தல்: இதைப்பற்றி சிந்திக்காமல் இருந்திருந்தாலும், நாற்பது வயதுக்குப் பின், கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Advertisment
Advertisements

நோய்த்தடுப்பைப் பரிசோதித்தல்: எடுக்காமல் விட்ட தடுப்பு மருந்தை உடனடியாக உட்கொள்ளவும்.

40 வயது பெண்களுக்கு மருத்துவ சோதனை

இரத்த சர்க்கரை: பல ஆண்டுகளாகத் தவறான உணவை உட்கொள்வதாலும் காபி, தின்பண்டங்கள், வறுவல்கள் போன்றவை எடை கூடுதலாலும்  கணையம் அதிகப்படியான வேலையைச் செய்திருக்கக்கூடும். 45-வது வயதில் இரத்த சர்க்கரை அளவைச் பரிசோதிக்க வேண்டும்; பின் குறைந்தபட்சம் மூன்றாண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்.

தகவல் உதவி: மருத்துவர் முத்துக்குமார், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிபுணர், வாட்ஸ் அப் தொடர்பு எண் 9344186480

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: