உடலுக்கு ஆரோக்கியம் தரும் பால் பொருட்களில் தயிருக்கு முக்கியத்துவம் உள்ளது. உடல் குளிர்ச்சி நமக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் தயிர் தற்போது கடைகளில் கிடைக்கிறது. அதே சமயம் கிராமங்களில் மாடு வைத்திருப்பவர்கள் தங்களது வீட்டிலேயே தயிரை தயார் செய்வார்கள். பாலை நன்கு காய்ச்சி அதில் உறை ஊற்றி வைத்தால் அடுத்த நாள் தயிர் ரெடியாகிவிடும்.
அதே சமயம் நாம் வீட்டில் செய்யப்படும் தயிர் எப்போதுமே நமக்கு கட்டியாக வருவதில்லை. நாம் எவ்வளவுதான் திக்காக பாலை காய்ச்சி வைத்திருந்தாலும் சில சமயங்களில் தயிர் நீர்த்துபோன தரத்தில் தான் கிடைககிறது இப்படி வரும் தயிரை கெட்டியாக மாற்ற வழி உள்ளது. எவ்வளது தண்ணீராக இருந்தாலும் அதில் கெட்டி தயிரை உருவாக்கலாம். அதேபோல் இந்த முறையில் பாலை உறைய வைத்தால் விரைவில் தயிர் ரெடியாகிவிடும்.
தேவையான அளவு பாலை நன்றாக கொதித்து பொங்கி வரும் வரை காய்ச்சி அதை மிதமான சூடாகும் வரை ஆறவைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு குழிக்கரண்டியில் 2 கரண்டி அளவு தயிர் எடுத்தக்கொண்டு அதில், ஒரு கரண்டி அளவு கான்பிளவர் மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். இரண்டும் ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போன்று கிடைக்கும்.
இந்த கவவையில் கால் டம்பளர் பாலை ஊற்றி நன்றாக கலகக்வும். இந்த கலவையை மிதமான சூட்டில் உள்ள பாலில் ஊற்றி நன்றாக கலக்கிவிட வேண்டும். அதன்பிறகு இந்த பாலை ஒரு மண்சட்டியில் வைத்து உறைபோட வேண்டும். காலையில இதனை செய்தால் மதியம் சாப்பாட்டிற்கு தயிர் தயாராகிவிடும்.
கான்பிளவர் மாவை சேர்த்துள்ளதால் தயிர் டேஸ்டாக இருக்குமா என்ற கேள்வி தேவையில்லை. திக்காக கட்டியாக கிடைக்கும் இந்த தயிர் நல்ல சுவையுடன் டேஸ்டியாக இருக்கும். அதேபோல் இந்த தயிரை மண்பானையில் உறைய வைக்கும்போது தயிர் நன்றாக புளித்து கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற நீரை மண்பானை உறிந்துவிடும். மண்பானை சமையல் எப்போது உடலுக்கு நன்மை தரும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil