scorecardresearch

நீண்ட ஆயுளுக்கு பெஸ்ட் உணவு… உங்க வீட்டில் இருக்கா?

Tamil Health Update : அதிக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களைச் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

Tamil Health Update : ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் முக்கிய இலக்காக இருப்பது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோககியமான வாழ்க்கை. இவை இரண்டுமே கிடைக்க வேண்டும் என்றால் சத்தான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். 20 வயதுடைய ஒருவர் அதிக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களைச் உணவில் சேர்த்துக்கொள்ள தொடங்கும்போது அவரது உடல் ஆரோக்கியமான திசையை நோக்கி நகரும்.

அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்  ஆய்வின்படி, 60 வயதில் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றத் தொடங்கியவர்கள் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகள் அதிக ஆயுள் பெறலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள், மீன் மற்றும் விளைபொருட்களில் கவனம் செலுத்தும் மத்தியதரைக் கடல் உணவு முறைகளைப் பின்பற்றி, நம் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்.

​​ஒவ்வொரு நாளும் உண்ணும் போது, ​​நீண்ட ஆயுளுக்கான இலக்கை ஆதரிக்க உதவும், சிறந்த உணவுப்பொருட்களை சேர்த்துக் கொள்ளவேண்டியது கட்டாயம். வால்நட்கள் முதல் பாதாம் மற்றும் முற்றிலும் சிற்றுண்டியாக இருக்கும் பிஸ்தா வரை நட்ஸ் அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய அம்சமாகும். இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, சில வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதம் ஆகியவை சம அளவில் நிறைந்துள்ளது.

உங்கள் உணவில் சில பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்வது  குறைந்த கொழுப்பு அளவுகள், நிர்வகிக்கப்பட்ட இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் எடை இழப்பு போன்ற பலன்களை பெறலாம். .மேலும் கூடுதல்போனஸாக, சில பருப்பு வகைகளை தினசரி சாப்பிடுவது, நீண்ட ஆயுளை அதிகரிக்க உதவும். 20 ஆய்வுகளை மதிப்பீடு செய்து மெட்டா பகுப்பாய்வை நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு 28 கிராம் நட்ஸ் உட்கொள்ளும்போது, எந்தவொரு காரணத்தினாலும் ஆரம்பகால மரணத்தின் அபாயத்தில் இருந்து 22 சதவிகிதம் குறைவதோடு தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது

மேலும் சுவாச நோய்கள், நீரிழிவு நோய், நரம்பியக்கடத்தல் நோய், தொற்று நோய் மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றால் ஆரம்பகால மரணம் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கிறது. குறிப்பாக அக்ரூட் பருப்புகள் வரும்போது, ​ ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஐந்து பரிமாண வால்நட்களை சாப்பிடுவது, ஆரம்பகால மரண அபாயத்துடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது

பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பிற பருப்புகளை சாப்பிடுவதும் நீண்ட ஆயுளை அளிக்கும் என்று தரவு காட்டுகிறது. பருப்புகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள எளிதான உணவாக இருப்பதால், உங்கள் வாழ்வில் வருடங்களைச் சேர்க்க முடியும். வால்நட், பாதாம் மற்றும் பிஸ்தா பட்டர் போன்ற உணவுள் உடலுக்கு அதே வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் அப்படியே கொட்டைகள் வழங்கும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும்.

ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு பருப்புகளை சாப்பிடுவது இளமையின் அடையளமாக இருக்கும்., உடல் செயல்பாடுகளில் பங்கேற்பது, ஆரோக்கியமான எடையைப் பராமரித்தல் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் ஆகியவற்றுடன் உங்கள் உணவில் இந்த மொறுமொறுப்பான துண்டுகள் உட்பட, உங்கள் நூற்றாண்டு பிறந்தநாளைக் காண நீங்கள் வாழலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health living a long and healthy life food benefits of life