நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? : நடிகை மாளவிகா மோகனன் சொல்லும் எளிய வழி

Tamil health Update : உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு நாளில் உருவாக்க முடியாத ஒன்று. ஆனாலும் கூட, ஆரோக்கியமான வாழ்க்கை சில அவசியமான நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்

Tamil Health Malavika Meganan Share Immunity Booster Drink : தற்போது உலகளவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், நமது உடலவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பருவகால நோய்களுடன் சேர்ந்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியமாக இருந்தாலும், சில வீட்டு வைத்தியங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் வீட்டில் உள்ள இயற்கை மசாலா பொருட்களை பயன்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இஞ்சி-மஞ்சள் டீயுடன் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை விளக்கியுள்ளார்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு நாளில் உருவாக்க முடியாத ஒன்று. ஆனாலும் கூட, ஆரோக்கியமான வாழ்க்கை சில அவசியமான நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம், உடலில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். “இஞ்சி தேநீர் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், மருத்துவ மற்றும் சிகிச்சை பண்புகளை கொண்டுள்ளதால்,  இது ஒரு பழமையான ஆயுர்வேத தீர்வாக உள்ளது.

இஞ்சியில் உள்ள முக்கிய பைட்டோநியூட்ரியண்ட் ஆரோக்கியமான நுண்ணுயிரியை பராமரிக்கிறது மற்றும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த மூலிகைகளில் ஒன்றாக, இஞ்சி குமட்டலைத் தடுக்க உதவுகிறது. வயிற்று பிரச்சினைகளை குறைக்கிறது என்றும் கூறப்படுகிறது. இஞ்சி உடலை சூடாக வைத்திருப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் உடலில் நச்சுகள் அதிகமாவதை தடுக்க உதவுகிறது.

மஞ்சள் குர்குமின் மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது, இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.. இது வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது, இது உடலின் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேலும் வலுப்படுத்த உதவுகிறது.

இஞ்சி தேநீர் செய்வது எப்படிஃ

தேவையான பொருட்கள்

இஞ்சி – அரை இன்ச்

மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி –

கருப்பு மிளகு தூள் ¼ தேக்கரண்டி –

தண்ணீர் 1.5 கப் –

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, தேவையான பொருட்களை சேர்க்கவும். குறைந்தது 10 நிமிடங்கள் அல்லது இஞ்சியின் சுவை நீரில் இறங்கும் வரை அனைத்தையும் ஒன்றாக வேகவைக்கவும். அதன்பிறகு *ஒரு கோப்பையில் தேநீரை வடிகட்டி, குடிக்கலாம் தேவைப்பட்டால் அதில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து பருகலாம் உடலல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த பானமான இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health malavika meganan share immunity booster drink

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express