15 மா இலை தண்ணீரில் கொதிக்க வைத்து... சுகர் பிரச்னைக்கு இப்படியும் தீர்வா?

Tamil Health Update : மா இலைகள் இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸின் விநியோகத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. அவை இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவும்

Tamil Health Update : மா இலைகள் இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸின் விநியோகத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. அவை இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
15 மா இலை தண்ணீரில் கொதிக்க வைத்து... சுகர் பிரச்னைக்கு இப்படியும் தீர்வா?

Tamil Health Update : இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக நீரிழிவு நோய் தொற்றுக்கு ஆளாகி வருவது தொடர்ந்து வருகிறது. இந்த நோய் பாதிப்பை கட்டுப்படுத்தவும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் பல்வேறு மருத்துவ முறைகள் உள்ளது. இந்த மருத்துவமுறைகள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் கிடைக்குமா என்றால் அது சந்தேகம் தான். இதனால் பலரும் நீரிழிவு நோயுடனே தங்களது வாழ்நாளை கழித்து வருகினறனர்.

Advertisment

ஆனால் இயற்கையில் கிடைக்கும் பல தாவரங்கள் மூலம் உடலில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க முடியும். இதில் பண்டிகை காலங்களில் வீட்டில் தோரணமாக கட்டி தொடங்கவிடும் மா இலை நீரிழிவு நோய்க்கு எதிராக பல ஆச்சரியமான நன்மைகளை கொடுக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கும் தெரியும்? மா இலை பெரும்பாலும அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடடிய பொருளாகும். ஆனால் இதன் மகத்துவத்தை பலரும் அறிந்துகொள்ள தவறி விடுகின்றனர்.

மா இலை பயன்படுத்தி நீரிழிவு நோய் கட்டுக்குள் வைப்பது எப்படி?

உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுகளில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தால் அதுவே நீரிழிவு நோய். இதனை சம அளவில் வைத்துக்கொள் ஆரோக்கியமான உணவு பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடிய உணவுளை கூடுதலாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisment
Advertisements

அந்த வகையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் ஒரு அருமருந்து மா இலை. மா இலைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் பண்புகள் நிறைந்தவை. நீரிழிவு மேலாண்மை (இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்) நீரிழிவு நோயின் சிக்கல்களைத் தடுக்கவும் உதவும். இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மா இலைகளின் நன்மைகளை தருவது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிருப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை.

நீரிழிவு சர்க்கரை நோய்க்கு மா இலைகள் உணவு:

மா இலைச் சாறு குடலில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்க உதவும் ஆல்பா குளுக்கோசிடேஸ் என்ற நொதியைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது, எனவே இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது. இலைச் சாற்றின் சரியான அளவைக் கண்டறிய கூடுதல் ஆராய்ச்சி தேவை,'' என்று பெங்களூர்.அஸ்டர் சிம்ஐ (Aster CMI ) மருத்துவமனை, உட்சுரப்பியல் ஆலோசகர்,  டாக்டர் மகேஷ். D. M,  கூறியுள்ளார்.

மா இலைகள் இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸின் விநியோகத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. அவை இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவும். இதில் பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டிற்கும் நன்மை பயக்கும்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க மா இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது?

சர்க்கரை நோய்க்கு மா இலைகளைப் பயன்படுத்த மிக எளிய முறையைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது 10-15 மா இலைகளை எடுத்து தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். இலைகளை நன்கு கொதித்த பிறகு, ஒரு இரவு விட்டுவிட்டு அடுத்தநாள் காலையில். தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த கலவையை தினமும் காலையில் தொடர்ந்து சில மாதங்களுக்கு குடிப்பதால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்படுவதை உணரலாம்.

ஆனாலும் கூட, நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் உணவை கவனமாக கண்காணிக்க வேண்டும். நீரிழிவு நோய்க்கு திறம்பட சிகிச்சையளிக்க உங்கள் மருத்துவர் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் கவனமாக பின்பற்றவும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்ணுங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: