/tamil-ie/media/media_files/uploads/2022/02/Recipe.jpg)
அறிவியல் வளர்ச்சி அதிகமாக இருக்கும் தற்போதைய காலகட்டத்தில், மக்கள் மத்தியில் உணவு பழக்க வழக்கங்கள் வெகுவாக மாறி வருகினறனர். மாற்றாக உள்ள இந்த உணவுகள் உடலுக்கும் தீங்கை விளைவித்து வருவது மறுக்க முடியாத உண்மை. இதற்கு மத்தியில் உள்ள பொதுவான சுத்தமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் உணவில் கவனம் செலுத்துவது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது, நல்ல உணவுகளை தேர்வு செய்வது நல்லது.
அந்த வகயைில் இந்தியாவில் ஜோவர் என்று அழைக்கப்படும் சோளத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது இன்றியமையாத பயணை தருகிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள சோளம் பச்சயம் இல்லாதது. அதே சமயம் இந்த தானியத்தில் பி வைட்டமின்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை அதிகளவில் உள்ன.
சோளம் ஒரு தினை, வகையை சார்ந்தது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. இயற்கையில் மிகவும் பல்துறை, உணவு தானியங்களில் முக்கியமானதாக உள்ள சோளம், இந்தியாவில் மிகவும் பிரபலமானது. சோளத்தில் இருந்து ரொட்டிகள், புலாவ்’ஸ் மற்றும் உப்மாக்கள் போன்ற உணவுகளை தயாரிக்கலாம். இந்த உணவுகள் உங்களை ஒரு நாள் முழுவதும் திருப்திகரமாக வைத்திருக்கும்.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இந்த உணவுகளை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் சில மாற்று வழிகள் மூலம் சோளத்தை சமைப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அந்த வகையில், சமையல் கலைஞர் மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சோளம் சமைக்கும் புதிய செய்முறையைப் பகிர்ந்துள்ளார். இந்த உணவை 'ஜோவர் கே முத்தியா' என்று அழைக்கும் அவர், இதை 'கரம் கரம் சாய்' உடன் பரிமாறுமாறு கூறியுள்ளார்.
தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய கேரட்- 1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு பல் (விரும்பினால்) 3
பொடியாக நறுக்கிய சிறிய இஞ்சி குமிழ்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் (சுவைக்கு ஏற்ப)
இறுதியாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1/2
வறுத்த வேர்க்கடலை (பாடு) – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் (ஹால்டி) - * 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி (தனியா) தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் (ஜீரா) - 1 தேக்கரண்டி
சாத தூள் (கீல்) - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை (விரும்பினால்) - 1 தேக்கரண்டி
எண்ணெய் -* 2 டீஸ்பூன்
தயிர் (தாஹி/மாற்றாக தண்ணீர் பயன்படுத்தலாம்) - 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
சோள மாவு (ஜோவர் கா அட்டா) - 1.5 கப்
ரவை (சுஜி/ரவா - கட்டுவதற்கு) - 1/4 கப்
வறுத்து தாளிக்க
கடுகு (ராய்) - 1 டீஸ்பூன்
எள் (டில்) - 2 டீஸ்பூன்
காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை :
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், கொத்தமல்லி தழை, பூண்டு பல், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையில், இறுதியாக நறுக்கிய முட்டைக்கோஸ், எலுமிச்சை சாறு, வறுத்த வேர்க்கடலை, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், ருசியை சமன் செய்ய சர்க்கரை, 2 தேக்கரண்டி எண்ணெய், தயிர் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அதன்பிறகு சோள மாவு சிறிது ரவையுடன் சேர்த்து மாவை ஒன்றாக இணைக்கவும். நன்றாகக் கலந்து, நடுத்தர அளவிலான கட்லெட்டுகளாக உங்கள் கைகளால் வடிவமைத்து, வேகும் வரை ஸ்டீமரில் வேகவைக்கவும்.
அடுத்து, வேகவைத்த கட்லெட்டுகளை எடுத்து, சிறிய அளவு துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துவிடவும்ஃ .
அதன்பிறகு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், இரண்டு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அடுத்து அதில் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கட்லெட்டுகளை சேர்ந்து பழுப்பு நிறமாகவும் வெளியில் மிருதுவாகவும் மாறும் வரை வதக்கவும்.
அவ்வாறு மாறியபின் அதை எடுத்து டீயுடன் சூடாக பரிமாறலாம் அல்லது அப்படியே சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.