scorecardresearch

ஒயிட் ரைஸ், கேக், பிரட்… கொரோனா காலத்தில் குறைக்க வேண்டிய உணவுகள் பட்டியல்!

Tamil Health Update : உடல் பருமன், சுற்றுச்சூழல் நச்சுகள், நாள்பட்ட நோய்கள், அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் முதுமை ஆகியவை பலவீனமான நோய்களின் காரணமாக உடலலி நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்புக்கு வழிவகுக்கும்

Tamil Health Update : தற்போது உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை வலுவாக வைத்துக்க கொரோனா தொற்று மக்கள் அனைவரும் தங்களது உடல்நிலையில், காட்டும் அக்கரையை மேம்படுத்தவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுளளது என்று சொல்லாம். உடலில் நோய் தாக்கம் இல்லாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

ஆனால் உடலில் அனைத்து சக்தியை போல நோய் எதிர்ப்பு சக்தி ஒரு நாளில் உருவாக்கப்படுவதில்லை. ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையின் உதவியுடன் இது காலப்போக்கில் உடல் பலப்படுத்தப்படுகிறது. அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ், தொற்று காரணமாக ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடி வருகிறோம். இதனை திறம்பட எதிர்கொள்ள நமது நோய் எதிர்ப்பு சக்தியை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமானது.

ஆனால், நமது நோயெதிர்ப்பு அமைப்பு சிக்கலானது மட்டுமல்லாமல் உணவுக்கு அடுத்து பல காரணிகளின் ஆரோக்கியமான சமநிலையால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. உடல் பருமன், சுற்றுச்சூழல் நச்சுகள், நாள்பட்ட நோய்கள், அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் முதுமை ஆகியவை பலவீனமான நோய்களின் காரணமாக உடலலி நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்புக்கு வழிவகுக்கும் சில முக்கிய காரணிகளாகும்..

இதன் காரணமாகத்தான் புகைபிடிப்பதை நிறுத்துதல், ஒரு நாளைக்கு 7-8 மணிநேரம் தூங்குதல், புரதச்சத்து நிறைந்த உணவில் கவனம் செலுத்துதல், உடற்பயிற்சி செய்தல், தினசரி தண்ணீர் உட்கொள்ளுதல் மற்றும் நினைவாற்றலைப் பயிற்சி செய்தல் போன்ற நடைமுறைகள் மேற்கொண்டால் வலுவான நோயெதிர்ப்பு செயல்பாட்டை பராமரிக்கும் போது பொதுவான நிபுணர்களின் பரிந்துரைகளாகும்.

ஆனால் இதில் நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. அது என்னென்ன என்பது குறித்து மணிப்பால் மருத்துவமனை குருகிராமில் உள்ள உணவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி கார்வின் பிளிஸ் கூறியுள்ளார்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ நூலகத்தின் ‘சுகர் அண்ட் த மொசைக் ஆஃப் ஆட்டோ இம்யூனிட்டி’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகள் நாள்பட்ட நோய்கள் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களின் அபாயங்களுடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது. சர்க்கரை நிறைந்த உணவு, நோய்களை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறனையும் கட்டுப்படுத்துகிறது.

எனவே, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், கேக் மற்றும் குக்கீகள், சர்க்கரை கலந்த காலை உணவு தானியங்கள், இனிப்பு பால் பொருட்கள், காற்றூட்டப்பட்ட பானங்கள் மற்றும் மைக்ரோவேவ் உணவுகள் போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள்

வெள்ளை மாவு, வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் வெள்ளை மாவுடன் செய்யப்பட்ட குக்கீகள், கேக்குகள், ரொட்டிகள் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்துடன் தொடர்புடையவை. அவற்றின் உட்கொள்ளலைக் குறைக்க முயற்சிக்கவும்.

செயற்கை இனிப்புகள் மற்றும் சேர்க்கைகள்

உணவுப் பொருட்களின் அடுக்கு ஆயுளை நீட்டிக்கப் பயன்படுத்தப்படும் சில செயற்கை இனிப்புகள் மற்றும் சேர்க்கைகளின் நுகர்வு குடல் பாக்டீரியா கலவையை மாற்றுகிறது, குடலில் வீக்கம் அதிகரிக்க வழிவகுக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மழுங்குகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவற்றிற்கு பதிலாக, காளான்கள், பப்பாளி, தக்காளி, மிளகு போன்ற காய்கறிகள், பழங்கள் மற்றும் பீட்டா கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் பிற வைட்டமின்கள் அதிகம் உள்ள ப்ரோக்கோலி, கீரை போன்ற பச்சை காய்கறிகளை உட்கொள்ளுங்கள். இஞ்சி, நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் ஆகியவை நீங்கள் நம்பக்கூடிய சில பொதுவான மற்றும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் உணவுகள்,

மேலும் ஆளி விதைகள், துளசி இலைகள், கருஞ்சீரகம் மற்றும் முலாம்பழம் விதைகள். தயிர் மற்றும் புளித்த உணவுகள் குடல் பாக்டீரியாவின் கலவையை புத்துயிர் பெறுவதால் அவை சிறந்த வழி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health nutrition alert avoid these foods for better immunity