Advertisment

நாட்டுக்கோழி vs பிராய்லர் கோழி : ஊட்டச்சத்து வேறுபாடு உள்ளதா? ஆராய்ச்சியாளர் கருத்து

நாட்டுகோழியில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கும் பிராய்லர் கோழியில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடுகள் ஒன்றும் இல்லை

author-image
WebDesk
New Update
Chicken

ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம்

நாட்டுகோழியில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் பிராய்லர் கோழிகளிலும் உள்ளது பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என  நாமக்கல் கால்நடை தீவன பகுப்பாய்வகம் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நடராஜன் கூறியுள்ளார்.

Advertisment

பல்லடம் பிராய்லர் கோழி கமிட்டி பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பின் சார்பாக நமது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று இரவு கோவை அவினாசி சாலை கொடிசியா பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா பிராய்லர் கோழிகள் குறித்தும் அது சார்ந்த பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவது குறித்தும், சிறப்புறையாற்றினார். மேலும் இந்த நிகழ்வைத் தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாமக்கல் கால்நடை தீவன பகுப்பாய்வகம் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின்  தலைவர் நடராஜன் கூறுகையில்,

பவுல்ட்ரி பார்மர்ஸ் ரெகுலேட்டரி கமிட்டி என்ற அமைப்பு கோவையில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் நோக்கம் இவர்கள் தயாரிக்கும் இறைச்சி கோழிகள் சுகாதாரமானது எனவும் இக்கோழிகளில் இருந்து நமக்கு கிடைக்கும் சத்துக்கள் பாதுகாப்பானது மற்றும் சுகாதாரமானது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இது சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னேடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலமாக மருத்துவ துறை சார்ந்த வல்லுநர்களை வரவழைத்து. இது ஒரு பாதுகாப்பான உணவுதான் என்பதை புரிய வைக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது எனவும் பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றது. மேலும் கோழிகளின் இறைச்சி மற்றும் எடையதிகரிப்புக்காக ஊசிகள் செலுத்துவது என்பது முழுக்க முழுக்க ஒரு தவறான செய்தி பரவிவருகிறது  இதனை மக்கள் நம்ப வேண்டாம்.

நமது குழந்தைகளுக்கு அம்மை நோய் மற்றும் போலியோ போன்ற நோய்கள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகள் செலுத்துகின்றோமோ அதே போன்று தான் இந்த வகை கோழிகளுக்கும் தடுப்பூசி மட்டுமே செலுத்துகிறோம். நாட்டுகோழிகளில் அதிக சத்துக்களும் பிராய்லர் கோழிகள் சத்து இல்லை என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. மனிதன் உருவாக்கியது தான் இந்த நாட்டு கோழி.

நாட்டு கோழியின் வளர்ச்சி நீடித்த நாட்கள் என்பதால், மனிதர்களுக்கு தேவையான அளவை ஈடு கொடுக்க அதனை உற்பத்தி செய்வது கடினமான ஒன்று, நாட்டுகோழியில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கும் பிராய்லர் கோழியில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடுகள் ஒன்றும் இல்லை. நாட்டுகோழிகள் அதிக நாட்கள் வளரகூடியவை. இதனால் இதன் சுவை கூடுதலாக உள்ளது வேறு எந்தவித சத்துக்களும் இல்லை. மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது பண்ணை கோழிகள் விவசாயிகள் ஒழுங்குமுறை குழுவின் மேலான்மை ஆலோசகர்  ராம்ஜி ராகவன், உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chicken
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment