scorecardresearch

டீ ஹைட்ரேஷன்? சுகர் பேஷன்ட்ஸ் சாப்பிட பெஸ்ட் பழம் இதுதான்!

Tamil Health : வாழைப்பழத்தின் அதிக பிரக்டோஸ் உள்ளடக்கம் உள்ளது, இது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.

டீ ஹைட்ரேஷன்? சுகர் பேஷன்ட்ஸ் சாப்பிட பெஸ்ட் பழம் இதுதான்!

Tamil Health Fruit For Diabetes Patients : தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த நோய் பதிப்பு இருப்பவர்கள் தங்களது உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வரலாம்

அதேபோல் சில பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலமும் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவரலாம். ஆனால் பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் உடனடி ஆற்றல் வழங்கும் என்று, பலராலும் பரிந்துரைக்கப்படும்  வாழைப்பழத்தை உடற்பயிற்சிக்கு முந்தைய காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த பழமாக கருதப்படுவதில்லை.

 ஏனெனில் வாழைப்பழத்தின் அதிக பிரக்டோஸ் உள்ளடக்கம் உள்ளது, இது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க வழிவகுக்கும். அப்படியானால், நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?  இது குறித்து உணவு சிகிச்சை நிபுணர் டாக்டர் ரியா பானர்ஜி அன்கோலா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் “வாழைப்பழம் தரும் ஆற்றல் மற்றும் தாதுக்கள் காரணமாக நாம் அனைவரும் உடற்பயிற்சிக்கு முன் வாழைப்பழத்தை சாப்பிடப் பழகிவிட்டோம். உடற்பயிற்சிக்கு முந்தைய சிற்றுண்டியாக வாழைப்பழம் நிச்சயமாக சிறந்த பழங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் வாழைப்பழத்தில் அதிக பிரக்டோஸ் உள்ளடக்கம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தைத் தவிர்க்க வேண்டும், ”என்று டாக்டர் ரியா அன்கோலாவின் உணவு சிகிச்சை என்ற பக்கத்தில் எழுதியுள்ளார்.

இதனால் நீரிழிவு நோயாளிகள் எந்த பழத்தை சாப்பிடலாம்?

டாக்டர் ரியா அன்கோலாவின் கூற்றுப்படி, 30-60 நிமிடங்களுக்கு முன் ஒரு கப் தர்பூசணி சாப்பிடுவது வியர்வையை வெளியேற்ற திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும்.

தர்பூசணி எப்படி உதவுகிறது?

தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து உள்ளது, எனவே, நீரேற்றத்துடன் இருக்க உதவும்.

இதில் உள்ள தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அமினோ அமிலங்கள் தசை வலியைக் குறைக்கும்.

இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இதனால் பிடிப்புகளை குறைக்க உதவும் ஒரு கனிமமாகும்.

இதில் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது.

சர்க்கரை குறைவாக இருப்பதால் இன்சுலின் ஸ்பைக் அல்லது பசியை கூட கொடுக்காது

தர்பூசணியில் நார்ச்சத்து அதிகம் இல்லாததால் எளிதில் ஜீரணமாகும்.

தர்பூசணி சிட்ரூலின் மற்றும் அமினோ அமிலமாகும்,  உடலுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலமான அர்ஜினைனாக வளர்சிதை மாற்றப்படுகிறது. அர்ஜினைன் என்பது நைட்ரிக் ஆக்சைட்டின் தொகுப்பில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் அடி மூலக்கூறு இருப்பதால் இருதய, நோயெதிர்ப்பு செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே, நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இல்லாவிட்டாலும், இந்த கோடைகால பழத்தை அனுபவித்து, நீங்கள் எவ்வளவு நன்றாக உணர்கிறீர்கள் என்று பாருங்கள்,  ஆனாலும் தர்பூசணி பழத்தை, உணவுடன் இணைக்க வேண்டாம். “முழு பழத்தையும் சாப்பிட முயற்சி செய்யுங்கள், சாறு அல்ல. காய்கறி சாலட்டில் பழங்களைச் சேர்க்க வேண்டாம்.

ஏனெனில் காய்கறிகளுடன் உண்ணப்படும் பிரக்டோஸ் காய்கறிகளின் செரிமானத்தைத் தாமதப்படுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும், ”என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health one of the best pre workout fruits for diabetics