Tamil Health Pappya Seeds Health Benefits : பொதுவாக நமது உடல் ஆரோக்கியத்தில் பழங்களின் பங்கு அதிகம். அனைத்து பழங்களுமே ஏதாவது ஒரு வகையில் நமக்கு ஊட்டச்சத்து அளிக்கும் விதமாக உள்ளது. ஆனால் இதில் சில பழங்கள் நமக்கு எளிதில் கிடைப்பதில். எளிதாக கிடைக்கும் பழங்களையும் நாம பெரிதாக எடுத்தக்கொள்வதில்லை. இந்த மாதிரியான மனப்போக்கு பலரிடம் உள்ளது. ஆனால் எந்த பழமாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு எடுத்தக்கொள்வது நல்லது. அந்த வகையில் நமக்கு அதிக பயன் தரக்கூடிய மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று பப்பாளி.
எப்படி வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு மிகுந்த பயன் தருகிறதோ அதேபோல் பப்பாளி மரத்தி்ல் பழம் இலை, பப்பாளி விதை என பல நன்மை தரும் விஷயங்கள் அடங்கியுள்ளது. ஆனால் அதில் இருந்து பப்பாளி பழத்தை மட்டுமே நாம் எடுத்தக்கொள்கிறேமே தவிர அதன் இலை மற்றும் விதைகளை நாம் ஒரு பொருட்டாக எடுத்தக்கொள்வதில்லை. ஆனால் பப்பாளி பழத்தை விட அதன் விதையில் அதிக நன்மைகள் இருக்கிறது என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.
பப்பாளி விதைகளின் பயன்கள்:
பப்பாளி பழம் மிகவும் சுவையானது. இது உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல், சருமத்திற்கு நன்மைகள் தருகிறது. ஆனால் பெரும்பாலும், மக்கள் பப்பாளியை வெட்டிய பிறகு பப்பாளி விதைகளை தூக்கி எறிந்து விடுகிறார்கள். பப்பாளி விதைகள் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பப்பாளி விதைகள் சில நோய்களுக்கு தீர்வாகவும் அமைகிறது. இந்த விதைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இந்த விதைகளை வெயிலில் உலர்த்தி பொடி செய்து பின் உட்கொள்ளலாம். பப்பாளி விதைகள் வயதான தோற்றத்தை எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால், தோல் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகின்றன.
பப்பாளி விதைகள் வீக்கத்தைக் குறைக்கும். இதில் வைட்டமின் சி, ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கீல்வாதம் அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றன. இதயம் தொடர்பான எந்தவொரு நோய்க்கும் பப்பாளி விதைகள் ஒரு அருமருந்து என்று கூறலாம்.. அதே நேரத்தில், இந்த விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. மேலும் பப்பாளி விதைகளை தினமும் உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
உடல் எடையை குறைக்க நீங்கள் இதுவரை பல முறைகளை பின்பற்றியிருக்கலாம் ஆனால் பப்பாளி விதைகளை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். உடல் எடையை குறைக்க நினைக்கும் அனைவருக்கு பப்பாளி விதை சிறந்த தீர்வாக அமையும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil