Tamil Health Update : குளிர் காலத்தில் வெப்பம் குறைவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சீசனில் தொற்று நோய் அபாயம் அதிகம் என்பது பலரும் அறிந்திறாத ஒன்று. மேலும் ககுளிர் சீசனில் நோய் எதிர்ப்பு சக்தி குறையவும் அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வகையில் உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதற்காக சத்தான் பழங்கள் மற்றும் இயற்கை உணவு பொருட்கள் உடலுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது.
அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வெப்பநிலை குறைவதால், ஏற்படும் பாதிப்புகளை தீர்க்கவும், ஜவ்வரிசி சோளம் சிறந்த ஊட்டச்சத்து உணவாக பயன்படுகிறது. மேலும் உடல் எடை குறைக்கும் உணவு ரொட்டி, தோசை போன்ற உணவுகள் போன்று சமைப்பதை விட இந்த உணவை பச்சையாகவே சாப்பிடலாம்
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு, கார்போஹைட்ரேட் சிக்கலாக கருதப்படுவதாலும், இந்த சோளம் ஜீரணிக்க நேரம் எடுக்கும் என்பதாலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது என்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஆரோக்கியமான உணவாககும்.
சோளம், செரிமான செயல்முறைக்கு உதவுவதைத் தவிர, உங்கள் இதய ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.,இதில் உள்ள சிறந்த நார்ச்சத்து உடலில் எல்டிஎல் (கெட்ட கொலஸ்ட்ரால்) அளவைக் குறைக்கும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த, தினை ஒரு தொகுப்பில் வழங்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் புவன் ரஸ்தோகி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஜவ்வரிசியை எண்ணெய் இல்லாமல் சிறிது சூடாக்கி, கடலை சட்னி அல்லது பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சையுடன் சேர்த்து பச்சையாக உட்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
சோளம் பச்சை நிறத்தில் இனிப்புச் சுவையுடன் உள்ளது, இதனை சாப்பிடுவதற்கு அதிகம் சமைக்க வேண்டியதில்லை. எண்ணெய் சேர்க்காமல் வெறும் வாணலியில் சூடாக்கி கடலை சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சையுடன் கூட இதை சாப்பிடலாம் என்று கூறியயுள்ளார்.
மற்ற தானியங்களான பஜ்ரா, கோதுமை போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, பச்சை சோளத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பாலிபினால்கள் அதிகம் உள்ளதாக ரஸ்தோகி, கூறியுள்ளார். மேலும் பதப்படுத்தப்பட்ட அல்லது சமைத்ததை விட பச்சை சோளம் அதிக ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகிறது. நன்கு சூடாக்குவதால் சோளத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன," இதனால் பச்சை சோளம் ஆரோக்கியமான காலை உணவு என்று கூறியுள்ளார்.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உணவுகள் நல்லது என்று கருதப்படுகிறது மற்றும் சோளம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் ஆரோக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்று. சோளம் கோதுமை மற்றும் பஜ்ராவை விட குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, நார்ச்சத்து மற்றும் புரதத்தின் ஒத்த மதிப்புகள் இருந்தாலும், அதில் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து உள்ளது. அறுவடைக் காலத்தில் இதை முயற்சித்துப் பாருங்கள்"
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil