இதய பராமரிப்பு, எடை குறைப்பு… பூசணி விதை எவ்வளவு முக்கியம் தெரியுமா?

Tamil Health Updte : செயற்கையான ஆங்கில மருத்துவதைதை விட இயற்கையில் கிடைக்கும் பொருட்களின் உள்ள மருத்தவ குணங்கள் நீண்டகால ஆரோக்கியத்தை கொடுக்கும்.

Health Update Pumpkin Seeds Benefits : மனித உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுவது சத்தான உணவு. இயற்கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களுமே நமக்கு பல வழிகளில் நன்மை சேர்க்கிறது. உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்ற பழமொழிக்கு ஏற்ப இயற்கையில் கிடைக்கும் சிறிய உணவு கூட நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும் நன்மை தரக்கூடியதாக அமைகிறது. ஆனால் நமது வேகமான வாழ்க்கை காரணமாக, நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் ஆரோக்கியமற்ற குறுக்குவழிகளை கையாண்டு வருகிறோம்.

ஆனாலும் கவலை வேண்டாம் இப்போது கூட நீங்கள் ஆரோக்கியமான  இயற்கை பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். செயற்கையான ஆங்கில மருத்துவதைதை விட இயற்கையில் கிடைக்கும் பொருட்களின் உள்ள மருத்தவ குணங்கள் நீண்டகால ஆரோக்கியத்தை கொடுக்கும். அந்த வகையில் அளவில் சிறியதானாலும் பூசணி விதைகள் மனித உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. பகலில் ஏற்படும் பசியை போக்கும் திறன் கொண்ட பூசணி விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

உணவில் பூசணி விதைகளை ஏன் சேர்க்க வேண்டும்?

பூசணி விதைகள் உடலுக்கு தேவையான அத்தியாவசிய கொழுப்பான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கொழுப்பு உடலில் உற்பத்தி செய்யமுடியாது என்பதால், உடலுக்கு தேவைப்படும் ஒமேகா -3 கொழுப்பை பூர்த்தி செய்ய உதவும் உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகள் சாப்பிடும்போது இந்த பிரச்சனை பூர்த்தி செய்யப்படும். அது மட்டுமல்லாமல், உயிரணு பராமரிப்பு ம் மற்றும், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், உடல் பருமனைத் தடுக்கவும் உதவுகிறது.

பூசணி விதைகள் உணவு நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக உள்ளது. “வெறும் 100 கிராம் பூசணி விதைகள் உங்களுக்கு 18 கிராம் நார்ச்சத்தை வழங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு சராசரி நபரின் தினசரி தேவையின் 72 சதவிகிதம் ஆகும்.

இது தொடர்பாக கயாவின் நிறுவனர் மற்றும் இயக்குனர் டோலி குமார், கூறுகையில், பெருங்குடல் 100 டிரில்லியன் குடல் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது, நார்ச்சத்து நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவை வழங்குகிறது, நமது குடலில் நுண்ணுயிர் சமநிலையை பராமரிக்கிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. இது நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது.

நல்ல கொழுப்பு அல்லது அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதம் (HDL) மற்றும் கெட்ட கொழுப்பு அல்லது குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதம் (LDL) ஆகிய இரண்டு வகைகளில் உள்ள கொலஸ்ட்ரால் நமது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமனிகளின் சுவர்களில் எல்டிஎல் உருவாகிறது, இதன் விளைவாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம். எச்டிஎல், தமனி சுவர்களின் பராமரிப்பு குழுவாக செயல்படுகிறது; கெட்ட கொழுப்பை நீக்கி அவற்றை மறுசுழற்சி செய்கிறது. பூசணி விதைகள் நமது உடலில் உள்ள கொழுப்பின் சமநிலையை பராமரிக்க ஒரு சிறந்த வழி என்று கூறியுள்ளார்.

பூசணி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தேவையற்ற கழிவுகளை நீக்குகின்றன. இணைக்கப்படாத எலக்ட்ரான்களைக் கொண்ட மூலக்கூறுகள். ஃப்ரீ ரேடிக்கல்கள் செல் புரதங்கள், டிஎன்ஏ மற்றும் உயிரணு சவ்வுகளை ஆக்ஸிஜனேற்றம் என பல வழிகளில் நன்மை தருவதாகவும் கூறியுள்ளார்.  குறைந்த கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பூசணி விதைகளை நீங்கள் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.,

மேலும் இந்த சுவையான விதைகள் உங்கள் சாலடுகள் மற்றும் சூப்களில் சேர்த்து சாப்பிடலாம்  நீங்கள் எந்த வழியில் அவற்றை வைத்திருக்க விரும்புகிறீர்களோ, அவற்றைச் சேர்ப்பது எப்போதும் நன்மை தருவதாக அமையும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health pumpkin seeds benefits update in tamil

Next Story
இந்தியாவின் நம்பர்.1 பணக்காரர்… ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express