Tamil Health Recipe Dry Fruits Laddu : இனிப்பு என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது லட்டு. வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி முதல் விருந்தில் உணவு பரிமாறுவது வரை அனைத்து நிகழ்வுகளிலும் லட்டு ஒரு பிரதான இனிப்பு பொருளாக வழங்கப்படுகிறது. நாவிற்கு சுவையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் இந்த லட்டு பலமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. இதில் எளிமையான முறையில் ஆரோக்கியம் நிறைந்த குறிப்பாக பெண்களுக்கு ஆராக்கியம் தரும் வகையில், லட்டு வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிஸ்தா – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
பாதாம் பருப்பு – 100 கிராம்
உலர் திராட்சை – 100 கிராம்
நெய் – தேவையான அளவு
பேரீட்சம்பழம் – 200 கிராம்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
தேவைப்பட்டால் வால்நட்ஸ், வேர்க்கடலை
செய்முறை:
முதலில் பாதாம் பிஸ்தா மற்றும் முந்திரி பருப்புகளை பொடிப்பொடியாக உடைத்து 3 நிமிடங்கள் நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் அதன்பிறகு ஒரு கடாயில் நெய் விட்டு உலர் திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். உலர் திராட்சை நன்கு உப்பி வரவேண்டும். அடுத்து சிறிதளவு நெய்விட்டு கொட்டை நீக்கிய பேரீச்சம்பழத்தை வதக்கி எடுத்தக்கொள்ள வேண்டும்
நெய்யில் வதக்கும்போது பேரீச்சம் பழம் சாஃப்ட்டாக மாறிவிடும். ஆறிய பிறகு அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்தக்கொள்ளவும். அரைத்த இந்த பேரீச்சம் பழத்தை வறுத்து வைத்திருக்கும் பருப்பு கலவையில் கொட்டிவிடவும். அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி தூவி, சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் அழுத்தம் கொடுத்து பிசைந்து சிறுநிறு உருண்டையாக பிடித்து லட்டு தயார் செய்யலாம். இதில் தேவைப்பாட்டால் வால்நட்ஸ் மற்றும் வேர்க்கடலையை நெய்யில் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம்.
பிடித்த இந்த லட்டுவை ட்பபாவில் வைத்துக்கொண்டு சாப்பிட்டு வரலாம் 15 நாட்கள்வரை இந்த லட்டு கெடாமல் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த லட்டை எடுத்தக்கொள்ளலாம். குறிப்பாக பெண்களுக்கு இந்த லட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடடிய பிரச்சினைகளை தீர்க்க இந்த லட்டு பெரிய பலனை கொடுக்கும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “