Tamil Recipe Kollu Rasam : தமிழரின் பாரம்பரிய உணவு தானியங்களில் கொள்ளுக்கு முக்கிய இடம் உண்டு. புரதம், இரும்பு, நார், மாவு ஆகிய சத்துக்கள் அடங்கிய இநத கொள்ளில் தாது பொருட்கள் அதிகம் உள்ளது. இந்த கொள்ளு சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் உண்டாவதை தடுக்கிறது. மேலும் ஜலதோஷம் வயிற்றுப்போக்கு, கண் தொடர்பாக நோய்களுக்கு கொள்ளு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கொள்ளு பல முறைகளில் சமைக்கப்படுகிறது.
அதில் முக்கியமான ஒன்று கொள்ளு ரசம். பொதுவாக ரசம் நமக்கு பல வழிகளில் நன்மைகள் அளிக்கிறது. ரசத்தில் சேர்க்கப்படும் பொருட்களின் மூலம் நம து உடலில் ஏற்படும் பல தொற்று நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த ரசத்தை கொள்ளு சேர்த்து செய்யும்போது அதன் குணங்கள் இரட்டிப்பாகும். அப்போது நமது உடலுக்கு மேலும் சக்தி அதிகரிக்கும்.
கொள்ளு ரசம் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் :
புளி – ஒரு நெல்லிக்காய அளவு
கொள்ளு – 100 கிராம்
தக்காளி – 2
மஞ்சள் தூள் – கால் ஸ்டீஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
வரமளகாய் – 8
தனியா – ஒரு டேபில் ஸ்பூன்
மிளகு – முக்கால் டீஸ்பூன்
சீரகம் – முக்கால் டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
நல்லென்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்
கறிவெப்பிலை – சிறிதளவு
மல்லி இலை - சிறதளவு
செய்முறை :
முதலில் கொள்ளுவை 4 டம்பளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் தக்காளி சேர்த்து வேக வைக்கத்து எடுத்துக்கொள்ளவும். இதில் வேக வைத்த தக்காளியை தனியாக எடுத்து அதனுடன் நன்றாக மசித்து புளிகரைசலை சேர்த்து, மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு வரமிளகாய், தனியா, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அம்மியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதேபோல் பூண்டையும் அம்மியில் நசுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிறிதளவு கடுகு போடவும். கடுகு பொரிந்ததும் அதில் 4 வரமிளகாய், பெருங்காயத்தூள் சிறிதளவு, கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். அதன்பிறகு ஏற்கனவே செய்து வைத்துள்ள புளிக்கரைசல அதனுடன் சேர்க்கவும்.
அதன்பிறகு ரசம் நன்றாக கொதித்ததும் அதனுடன் வேகவைத்து கொள்ளு தண்ணீரை சேர்த்து அதன்பிறகு வேவைத்த கொள்ளுவை நன்றாக மசித்து அதனுடன் சேர்க்கவும். லேசாக கொதிநிலை தொடங்கும்போது அதில் அம்மியில் அரைத்த மிளகாய் கலவையை மற்றும் பூண்டை சேர்த்து நுரை கட்டும்போது இறக்கிவிட வேண்டும். அதனுடன் சிறிது கொத்தமல்லி இலை சேர்த்தால் சுவையான கொள்ளு ரசம் தயார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil