Tamil Lifestyle Update : ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத தேவை. உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளதோ அந்த அளவிற்கு மனிதனின் வாழ்நாளும் அதிகரிக்கும். இதனால் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது கட்டாயமான ஒன்று. அதற்கான சத்தான உணவு காய்கறிகள், பழங்கள் கீரைகள் என பலதரப்பட்ட உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டியது கட்டாயம்.
உடல் ஆரோக்கியத்திற்கு உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் உணவுகளை உட்கொள்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகள் இருந்தாலும், குடல் இயக்கத்தை மேம்படுத்துவது மற்றும் பற்கள் ஈறுகளை வலுப்படுத்தவும் ஒரு பயனுள்ள தீர்வு ஆயுர்வேத பாரம்பரியத்தின் தீர்வாக வறுத்த எள் - வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் எள் முக்கிய பங்காற்றுகிறது.
பற்கள் மற்றும் ஈறு ஆரோக்கியத்திற்கு வழக்கமாக பல் துலக்குவதை காட்டிலும், கால்சியம் நிறைந்த உணவுகளால் பற்களை வலுப்படுத்தலாம். இது குறித்து ஆயுர்வேத மசாஜ் தெரபிஸ்ட் நிதி ஷேத் எள் விதைகள் எப்படி ஒருவரின் உடல்நலத்திற்கு பெரிதும் உதவும் என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவின்படி, வறுத்த எள் விதைகளை அதிகாலையில் மென்று சாப்பிடுவது பற்களை வலுப்படுத்தவும் மற்றும் ஈறுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. மென்ற பிறகு, பற்பசை பயன்படுத்தாமல், மென்மையான ப்ரஸ்ஷூடன் மீண்டும் பல் துலக்கவும்," என்று அவர் குறிப்பிட்டார்.
எள் ஏன்?
எள் விதைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால், அவை பற்கள் மற்றும் ஈறுகளைச் சுற்றியுள்ள எலும்பைப் பாதுகாக்கின்றன. பல் பற்சிப்பியை உருவாக்க உதவுவதன் மூலம் அவை பிளேக்கை அகற்ற உதவுகின்றன.
எள் விதைகளை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் மற்ற நன்மைகள் என்னென்ன?
அதிகாலையில் ஒருவர் வறுத்த எள் மெல்லும்போது, அது "கல்லீரல் மற்றும் வயிற்றைத் தூண்டுகிறது மற்றும் செரிமான செயலை மேம்படுத்துகிறது". "வாய் ஆரோக்கியம் நமக்கு இன்றியமையாத ஒன்று. நமது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு மட்டுமல்ல, நமது செரிமான உறுப்பு மற்றும் திசு ஆரோக்கியத்திற்கும் கூட எள் பெரிதும் உதவுகிறது" என்று ஷேத் கூறினார்.
எள் விதைகள் ஒரு ஆயுர்வேத அதிசய விதை! அவை எலும்புகள், பற்கள் மற்றும் முடியை வலுப்படுத்த உதவுகின்றன. முதியவர்கள் மற்றும் தனிநபர்களுக்கு உலர் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது; விதைகள் உலர் மற்றும் ஹேக்கிங் இருமலை ஆற்ற உதவும், ”என்றும் அவர் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil