Tamil Health Update : உணவிற்கு தவிர்க்க முடியாத ஒரு பொருள் உப்பு. உப்பில்லா பொருள் குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப உணவில் உப்பு இல்லையெனில் அதன் சுவை அறிய முடியாது. அதேபோல் உணவிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உப்பு பல வகைளில் நன்மை அளிக்கிறது. உப்பு அதிகமாக உள்ள எந்த பொருளும் விரைவில் கெட்டுப்போகாது என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றார் போல் உப்பு பல வகைகளில் நமக்கு நன்மை அளிக்கிறது.
ஆனால் மற்ற பொருட்களை போல் உப்பிலும் கலப்படம் செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. இயற்கையாக கடல் நீரில் இருந்து பெறப்படும் உப்பில் கலப்படம் செய்யும்போது அதன் மருத்துவ குணங்கள் காணாமல் போகும். அதனை உட்கொள்ளும்போது பலவகையான இன்னல்கள் ஏற்படுகிறது. இதில் தற்போது அயோடின் குறைபாடு கோளாறு (ஐடிடி) தடுக்க உதவும் என்பதால், அயோடின் கலந்த உப்பை எப்போதும் மிதமாகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
அயோடின் மூளை மற்றும் உடலின் சரியான வளர்ச்சி மற்றும் உடல் வெப்பநிலையை பராமரிப்பதை உறுதி செய்கிறது. இதனால் தேசிய அயோடின் குறைபாடு கோளாறுகள் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து சமையல் உப்புகளையும் அயோடிஸ் சேர்ப்பதற்கான ஒரு உத்தியை மேற்கொண்டது. உணவு கலப்படச் சட்டம், உற்பத்தி மட்டத்தில் அயோடின் கலந்த உப்பு 30 பிபிஎம் -க்கும் குறைவாகவும் நுகர்வோர் அளவில் 15 பிபிஎம் -க்கும் குறைவாக இருக்கக்கூடாது என்று கூறுகிறது.
ஆனால் பல பிராண்டுகள் தரம் மற்றும் ஏற்றுக்கொள்ளும் அளவுகளில் தேசிய தரங்களை கடைபிடிக்கவில்லை. பெரும்பாலும் பொதுவான உப்பில் அயோடின் கலந்த உப்பு கலக்கப்படுகிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் நாம் பயனபடுத்தும் உப்பில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக என்பதை ஒரு எளிய சோதனை மூலம், கண்டறியலாம். இதன் மூலம் அயோடின் கலந்த உப்பை தேர்வு செய்யலாம்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் உப்பில் உள்ள கலப்படத்தை விரைவான முறையில் எவ்வாறு சோதிக்கலாம் என்பதை விளக்கும் வீடியோவைப் பகிர்ந்தது.
உருளைக்கிழங்கை எடுத்து அதனை இரண்டு துண்டுகளாக வெட்டவும்.
வெட்டப்பட்ட பரப்புகளில் உப்பு மாதிரிகளை தடவி ஒரு நிமிடம் காத்திருக்கவும்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் மாதிரிகளுக்கும் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
சிறிது நேரத்தில் உருளைக்கிழங்கு நிறம் மாறவில்லை என்றால் அதற்கு இரட்டை வலுவூட்டப்பட்ட உப்பு தான் காரணம்.
கலப்படம் செய்யப்பட்ட அயோடின் கலந்த உப்பு உருளைக்கிழங்கை நீல நிறமாக்குகிறது.
இந்த எளிய சோதனையின் மூலம் தரமான உப்பை கண்டறியலாம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil