ஒவ்வொரு மனிதனும் உடல் சோர்வு இல்லாமல் உழைக்க தண்ணீர் இன்றியமையான ஒரு முக்கிய தேவையாக உள்ளது. பூமியில் இருந்து கிடைக்கும் தண்ணீர் தாகத்தை தனிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அதே சமயம் தண்ணீர் பல வகைகளில் நன்மை அளித்தாலும் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் நமக்கு கெடுதலையை உண்டாக்கும் என்பது பலரும் அறியாத ஒன்றாக உள்ளது.
நம்மில் பலரும் சிறிதும் யோசிக்காமல், பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரைப் வாங்கி பருகி வருகிறோம். இது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும். பல பிளாஸ்டிக் பாட்டில்கள் கடற்கரைகளில் கிடக்கும் நிலையில், தெருக்களில் வீசப்படும் பாட்டில்கள் கழிவு நீர் வடிகால் அமைப்புகளையும் கூட அடைத்துவிடும்.
இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறுகையில், "இந்தியா ஆண்டுதோறும் 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது மற்றும் தனிநபர் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளதாக பிடிஐ கூறியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நிகழ்வில் பேசிய அவர், “பிளாஸ்டிக் இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் மாசுபாடு நமது சுற்றுச்சூழல் அமைப்புகளை மோசமாக பாதிக்கிறது மற்றும் பெரிய காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது.
கூடுதலாக, ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வின்படி, பாலிகார்பனேட் பாட்டில்களில் இருந்து தண்ணீரை உட்கொண்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் பிஸ்பெனால் ஏ (பிபிஏ) இரசாயனம் காரணமாக சிறுநீர் செறிவு கணிசமாக அதிகமாக இருந்தது. மேலும் பாட்டில் சூடாகும்போது இந்த திரவங்கள் வெளிப்பட்டு இந்த விளைவை இன்னும் பெரியதாக ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இளம் பெண்களின் நடத்தை மற்றும் உணர்ச்சி சிக்கல்களுடன் இணைக்கப்பட்டுள்ள அதிக சிறுநீர் அளவு பிபிஏ உள்ளவர்களுக்கு இதய நோய் அல்லது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்,” என்று ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் தெரிவித்துள்ளது.
இதனை ஒப்புக்கொண்ட வேதம்ரிட்டின் நிறுவனர் டாக்டர் வைஷாலி சுக்லா “பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் அதிக வெப்பமடையும்போது அது தண்ணீரில் மைக்ரோ பிளாஸ்டிக்கை வெளியிடுகிறது. அந்த தண்ணீரைக் குடித்தவுடன் உங்கள் உடலுக்குள் நுழைகிறது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் மனித உடலுக்கு ஹார்மோன் சமநிலையின்மை, மலட்டுத்தன்மை மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இடையூறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
அப்புறப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுற்றுச்சூழலில் இருக்கும்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆரோக்கியமான மாற்றுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பாட்டில்களைத் தேர்வுசெய்து மக்கள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் தலைமை மருத்துவர், கதிரியக்கவியல் மற்றும் தலையீட்டு கதிரியக்க நிபுணரான டாக்டர் விமல் சோமேஷ்வர் இது குறித்து வெளியிட்டுள்ள விளக்கத்தில், “பிளாஸ்டிக் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் குளோரைடு ஆகியவற்றால் செய்யப்பட்ட பாலிமர் ஆகும். இது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களில் ஒன்று BPA ஆகும். இதனை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை நீண்ட காலத்திற்கு அல்லது அதிக வெப்பநிலையில் சேமிக்கும் போது அதன் நஞ்சுத்தன்மை அளவு அதிகரிக்கிறது.
எனவே, பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படும் நீரை நீண்ட நேரம் உட்கொள்வது, “ஹார்மோன் கோளாறுகள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆண்களில், குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களுக்கு குறைந்த வயதி் பருவமடைவதற்கு வழிவகுக்கும். பாட்டில் தண்ணீரை உட்கொள்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய் வருவதற்கான நிகழ்தகவு அதிகம். பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படும் திரவங்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து நமது சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவே சரியான நேரம். திரவங்களை, குறிப்பாக தண்ணீரை, செம்பு பாத்திரங்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைக்கும் பழைய காலத்திற்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும்.
நிலைத்தன்மையைப் பொறுத்தவரை, "பாட்டில் நீரின் முழு வாழ்க்கை சுழற்சியும் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துகிறது, இது புவி வெப்பமடைதலுக்கும் மற்றும் மாசுபாட்டை ஏற்படுத்தவும் வழி செய்வதாக" ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் வாங்கப்படுகின்றன.
"2009 முதல் உலகளவில் விற்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் நியூயார்க்கின் மன்ஹாட்டன் தீவுக்கு மேலே இருக்கும். கடந்த ஆண்டு மட்டும் 480 பில்லியனுக்கும் அதிகமான இந்த பாட்டில்கள் விற்கப்பட்டதாக யூரோமானிட்டர் இன்டர்ஹேஷ்னல்-ன் தரவு காட்டுகிறது” என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.