Tamil Lifestyle Update : தமிழரின் பாரம்பரிய உணவுப்பொருட்களில் இட்லிக்கு முக்கிய இடம் உண்டு, வீடாக இருந்தாலும் ஹோட்டலாக இருந்தாலும் இட்லி இல்லாமல் காலை உணவு இருக்காது என்று சொல்லிவிடலாம். இட்லியை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே அரிசி அதற்கு ஏற்ற அளவில் உளுத்தம் பருப்பு மற்றும் அதில் சேர்க்கப்படும் வெந்தயம் போன்ற சில பொருட்களை ஊறவைத்து அரைக்க வேண்டும். அரைத்த மாவை சில மணி நேரங்கள் நொதிக்க வைத்த பின்பே இட்லி தயாரிக்க முடியும்.
பெரும்பாலும் இட்லி இந்த வழியில் தான் இட்லி தயாரிக்கப்படுகிறது. ஆனால் மாவை அரைக்காமல் உடனடியாக இட்லி செய்யும் முறை உள்ளது உங்களுக்கு தெரியுமா? அப்படி ஒரு முறை இருக்கிறது. இந்த முறையில் இட்லி செய்யும்போது மென்மையாகவும் அதே சமயம் குறைந்த நேரத்தில் இதை செய்துமுடிக்க முடியும். அவசரத்திற்கு சுவையாக உணவு செய்ய இந்த முறையை பயன்படுத்தலாம்.
மாவு அரைக்காமல் இட்லி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
தயிர் - 1 கப்
ரவை - 1 கப்
தாளிக்க:
எண்ணெய் – டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை , கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை :
முதலில் தயிரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலக்கிக்கொள்ளவும். அதன்பின் அதில் ரவை சேர்த்து நன்றாக கலக்கி, இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளுக்கள் வைத்துக்கொள்ளவும். கொஞ்சம் கெட்டியாக இருந்தால் இட்லி நன்றாக வரும்.
அதன்பின் அடுத்ப்பில் கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். தொடர்ந்து அந்த தாளிப்பை மாவில் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கலக்கலும்.
அதன்பிறகு இட்லி குக்கர் அடுப்பில் வைத்து, தட்டில் மாவை இட்லிக்கு ஊற்றுவது போல் ஊற்றி வேக வைக்கவும். 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் இட்லி வெந்திருக்கும். இதனை எடுத்து தேங்காய் கெட்டி சட்னியுடன் சேர்த்து சாப்பிடும்போது அதிக சுவை கிடைக்கும். சுவையான ரவை இட்லி உங்க வீட்டில் செய்து பாருங்கள்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil