/tamil-ie/media/media_files/uploads/2021/08/cinnamon.jpg)
Tamil Lifestyle Update : விஞ்ஞானி உலகில் தற்போது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய நோய் நீரிழிவு. ஒரு நபரின் உடல் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது நீரிழிவு நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது. கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் ஹார்மோன் - குளுக்கோஸை ஆகியவை குறைகயும் போதும் சர்க்கரைநோய் ஏற்படுகிறது. இந்த நிலை, சரியாக கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
இது தொடர்பாக சமீபத்தில் வெளியான உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீட்டின்படி கடந்த 2016 ல் , 1.6 மில்லியன் இறப்புகள் நேரடியாக நீரிழிவு நோயால் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டு அதிக இறப்புகளில் நீரிழிவு நோய் புஏழாவது முக்கிய காரணமாகும். ஆனால், இது எல்லாம் கொடுமையானது அல்ல. இதில் நல்ல செய்தி என்னவென்றால், நீரிழிவு சில நேரங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட உணவு, வழக்கமான பரிசோதனை மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்தலாம்.
மருத்துவரின் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் உங்கள் உடலில் சர்க்கரை அளவை சமாளிக்க உதவும் பல வீட்டு மருத்துவ முறைகள் உள்ளன. பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களை வைத்து பல நோய்களுக்கு மருத்துவம் பார்க்க முடியும். அந்த வகையில் சமையலில் வாசனை பொருளாக பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது. இது பல்வேறு இனிப்பு மற்றும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு தொலைதூர சுவைகளை சேர்க்க பயன்படுகிறது.
கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான வேளாண் ஆராய்ச்சி இதழின் பதிப்பில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு நாளைக்கு 1 கிராம் இலவங்கப்பட்டை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் மற்றும் வகை 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க அல்லது மாற்றியமைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
உங்கள் உணவில் இலவங்கப்பட்டை சேர்ப்பதன் நன்மைகள் :
மசாலா குளுக்கோஸ் நுகர்வுக்காக உயிரணுக்களைத் தூண்டுவதாக அறியப்படுகிறது. இலவங்கப்பட்டை உட்கொள்வது கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது மற்றும் குளுக்கோஸின் செயலாக்கத்திற்கு உதவும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.
இது ஒருவரின் பசியைக் கட்டுப்படுத்தும் மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பை அகற்ற உதவும் கனிம குரோமியத்தையும் கொண்டுள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, இது ஒரு சிறந்த டிடாக்ஸ் பானத்தை உருவாக்குகிறது. நீரிழிவு பராமரிப்பு இதழில் 2003 இல் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வின் முடிவுகள், இலவங்கப்பட்டை வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது. மேலும் நீரிழிவு மற்றும் இருதய நோய்களுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளைக் குறைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..
இலவங்கப்பட்டை உணவில் எப்படி சேர்ப்பது?
இலவங்கப்பட்டை நீருடன் நாளைத் தொடங்குங்கள்
காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நாள் தொடங்குவதற்கு ஒரு நல்ல வழியாகும், அது ஆரோக்கியமாக இருக்க ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். இது நீரிழிவு நோய்க்கு உதவுவது மட்டுமல்லாமல் சில கூடுதல் கொழுப்புகளை எரிக்கவும் உதவும்.
சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்று
இலவங்கப்பட்டை ஒரு இயல்பான இனிப்பு சுவை கொண்டது, இதை இயற்கை இனிப்பாகவும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகவும் பயன்படுத்தலாம். கேக், பை, கீர், ஹல்வா அல்லது பர்பி போன்ற இனிப்புகளாக இருந்தாலும், ஆரோக்கியமான இனிப்பை அனுபவிக்க சிறிது இலவங்கப்பட்டை பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.
தேநீர் மற்றும் காபியில் சேர்க்கவும்
இலவங்கப்பட்டை தேநீர் மற்றும் காபியுடன் நன்றாக செல்கிறது, இது மிகவும் சுவையாக இருக்கும். உங்கள் மசாலா தேநீர் அல்லது சூடான காபியில் இலவங்கப்பட்டையின் தனித்துவமான சுவை, மேலும் அதன் பல்வேறு ஆரோக்கிய நன்மை பயக்கும் பண்புகள் உங்கள் சூடான கப் பானத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் சமன் செய்யும்.
காலை ஓட்ஸ்
இலவங்கப்பட்டை தூளை ஒரு கிண்ணத்தில் பழங்கள் மற்றும் தானியங்களின் சுவையில் நன்றாக சுவைக்கலாம்.
கறிகள்
சுவையான கறிகளை உருவாக்க கிராம்பு மற்றும் மிளகுத்தூள் போன்ற உலர்ந்த மசாலாப் பொருட்களுடன் ஒரு சிறிய இலவங்கப்பட்டை சேர்த்து வறுக்கவும் அப்போது சுவை கூடுதலாக கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.