ஆண் என்றாலும் பெண் என்றாலும் தங்களை அழகாக வைத்துக்கொள்ள பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர். இதற்காக பல .பேஸ் கிரீம் பேஸ் பேக்குகள் பயன்படுத்துவது தொடர்கிறது. சிலருக்கு முகம் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும் அதில் சிறு கரும்புள்ளி இருந்தால், அதை நினைத்து வருத்தப்படுவார்கள். இதனை போக்குவதற்கு பல வழிகளிலும் முயற்சிப்பார்கள். ஆனால் இயங்கையில் கிடைக்கும் சில பொருட்களை வைத்தே இதனை சரி செய்யலாம்.
Advertisment
முகத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை எப்படி போக்குவது என்பது குறித்து டாக்டர் மைதிலி கூறியுள்ளார். அனைவருக்கு பொதுவாக தெரிந்த திரிபல சூரணம் வைத்து அழகான பேஸ் பேக் தயார் செய்யலாம். கடுக்காய், நெல்லிக்காய், சாதிக்காய் இவை மூன்றையும் அழைத்து தயார் செய்வது தான் இந்த திரிபலா சூரணம். மேற்சொன்ன 3 காய்களிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் சி நமது உடலில் அப்ளை பண்ணும்போது, சருமத்தில் இருக்கும் மெலனின் உற்பத்தியை அதிரிக்கும்.
இந்த மெலனின் உற்பத்தி சீராக இருக்கும்போது நமக்கு, சருத்தின் நிறம் ஒரே மாதரியாக இருக்கும். மேலும் இந்த திரிபலா சூரணம், முகத்தில் ஏற்படும் முகப்பரு, கரும்புள்ளி இவை இரண்டையும் தீர்க்கும். ஒரு சிலருக்கு முகப்பரு வந்து போனதுக்கு அப்புறம் கருப்புள்ளி அப்படியே இருக்கும். கரும்புள்ளிகளை இயற்கையாகவே மறைய வைக்கும் தன்மை திரிபலாவுக்கு இருக்கும். அனைத்து சருமத்திற்கும் சரியாக இருக்கும் இந்த திரிபலா பேஸ் பேக்கை, 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.