Advertisment

நீங்கள் கடையில் வாங்கிய மஞ்சள் பொடி கலப்படமா? கண்டுபிடிக்க எளிய வழி

Tamil Health Update : நன்மை தரும் பொருளாக இருந்த இயற்கை பொருட்கள் கலப்படத்திற்கு பிறகு மனிதனுக்கு நோயை உண்டாக்கும் விஷமாக மாறிவிடுகிறது

author-image
WebDesk
New Update
நீங்கள் கடையில் வாங்கிய மஞ்சள் பொடி கலப்படமா? கண்டுபிடிக்க எளிய வழி

Tamil Lifestyle Update : இயற்கையில் மற்றும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பல பொருட்கள் நமக்கு அதிகப்படியான மருத்துவ நன்மைளை வழங்குகிறது. அந்த பொருட்களின் மருத்துவ குணங்களை அறிந்து சரியான நேரத்தில் அதனை எடுத்துக்கொள்வதன் மூலம் பல நோய்களை கட்டுப்படுத்த முடியும். இதனால் பெரும்பாலான மக்கள் இயற்கை மற்றும் சமையல் பொருட்களை மருத்துவ பொருளாக பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisment

இதை பயன்படுத்திக்கொள்ளும் சிலர் இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் ஒரு சில வேதிப்பொருட்களை கலப்படம் செய்து விற்பனை செய்வது தற்போது அதிகளவில் நடைபெறுகிறது. இந்த கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தும்போது, பலவகையான நோய்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுவோம். அதுவரை நன்மை தரும் பொருளாக இருந்த இயற்கை பொருட்கள் கலப்படத்திற்கு பிறகு மனிதனுக்கு நோயை உண்டாக்கும் விஷமாக மாறிவிடுகிறது என்றே கூறலாம்.

இது தொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பல வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதில் ஒரு சில எளிய சோதனையின் மூலம் கலப்பட பொருட்களைகண்டறியலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் மனிதனுக்கு உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றும் மஞ்சள் தூள் சமையலிலும் தனக்கென தனி அங்கிகாரத்தை பெற்றுள்ளது. மஞ்சள் தூள் எடுத்துக்கொள்ளும்போது உடலில் நோய் தொற்று இருக்காது என்று கூறுலார்கள்.

ஆனால் தற்போது கடைகளில் கிடைக்கும் மஞ்சள் தூள் நமக்கு தன்மை தருமா என்பது ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு எளிய சோதனையின் மூலம் மஞ்சள் தூள் நல்லதா அல்லது அதில் கலப்படம் இருக்கிறதாக என்பதை கண்டறிந்துவிடலாம். இது தொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

-இரண்டு கிளாஸ் தண்ணீரை எடுத்து அவற்றில் சிறிதளவு மஞ்சள் சேர்க்கவும்.

கலப்படமில்லாத மாதிரி வெளிர் மஞ்சள் நிறமாக மாறுவதை நீங்கள் பார்க்கலாம்.  அதில் மஞ்சள் தூள் நீருக்கு அடியில் சென்றுவிடும்.

ஆனால் கலப்படமான மஞ்சள் கொண்ட கரைசலின் நிறம் அடர் மஞ்சளாக இருக்கும், பிரகாசமான மஞ்சள் நிறமாக மாறும்.

இந்த சோதனையில் மூலம் கலப்படமான மஞ்சள் தூளை எளிதில் கண்டறியலாம்.

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருந்தாலும், பங்களாதேஷில் வளர்க்கப்படும் மஞ்சளில் சாதாரண அளவை விட 500 மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்ட ஹெவி மெட்டல் ஈயம் இருக்கும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. ஒன்பது மஞ்சளை வளர்க்கும் மாவட்டங்களில் ஏழு பகுதிகளில், 'குரோமேட்' எனப்படும் நச்சு பிரகாசமான மஞ்சள் ஈயம் கொண்ட கலவை கலந்த மஞ்சளை உற்பத்தி செய்ததாக அது கூறுகிறது.

இந்த ஆய்வு செப்டம்பர் 17, 2019 அன்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது, அதன்படி மிகவும் நச்சுத்தன்மை கொண்ட , ஈயம் நரம்பு செல்களை பாதிக்கிறது. கூடுதலாக, முன்னணி நுகர்வுக்கு பாதுகாப்பான வரம்புகள் இல்லை. எனவே மஞ்சள் வாங்கும்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

சந்தையில் இருந்து வாங்கி வரும்"புதிய, பச்சை காய்கறிகள்" கலப்படமா இல்லையா என்பதை அறிய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒரு சோதனையை பகிர்ந்து கொண்டது,

திரவ பாரஃபினில் நனைத்த பருத்தி துண்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெண்டைக்காயின் ஒரு சிறிய பகுதியின் வெளிப்புற பச்சை மேற்பரப்பை தேய்க்கவும்

பருத்தி துண்டு நிற மாற்றம் காணப்படாவிட்டால், அது கலப்படமற்றது.

மாறாக பருத்தி துண்டு பச்சை நிறமாக மாறினால், அது கலப்படமானது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Tamil News Update Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment