Tamil Health Update Carrot Benefits For Diabetes and Cancer Patients : பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் ஒவ்வொரு நோய் தொற்றுக்கும் இய்றகை பொருட்களில் அதற்காக தீர்வுகள் உள்ளது. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் ஆயுவேதம் கூறியுள்ள இயற்கை பொருட்களை பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் சமீப காலமாக ஒவ்வொரு நோய்க்கும் செயற்கையாக மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. மக்களும் இயற்கையை தவிர்த்து செயற்கைக்கு மாறி வருவதால், பல்வேறு நோய்க தொற்றுக்களுக்கு ஆளாகின்றனர்.
ஆனால் தற்போது உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருன்கும் கொரோனா இயற்கை பொருட்களின் அவசியத்தை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். கொரோனா தொற்றால் பாதி்க்கப்பட்ட அனைவருமே தற்போது பாரம்பரிய வைத்திய முறைகளை கடைபிடித்து குணமடைந்து வருகின்றனர். இதனால் தற்போது பாரம்பரிய பொருட்களுக்காக வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், சுகர் மற்றும் கேன்சர் நோயாளிகளுக்கு கேரட் எவ்வாறு பயன்படுகிறது என்பதை லூக் குடின்ஹோ என்ற ஆரோக்கிய பயிற்சியாளர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பொதுவாக குளிர்கால காய்கறிகள், ஆரோக்கியமாக இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் அவசியம். அத்தகைய ஒரு குளிர்கால சூப்பர்ஃபுட் கேரட். இது பல வழிகளில் நமக்கு ஆரோக்கிய நன்மைகளை உறுதியளிக்கும் ஒரு ஆணிவேர் காய்கறி. என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஆரோக்கியத்திற்காக கேரட்டை ஏன், எப்படி தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பதிவிட்டு்ளளார்.
“கேரட்டை முழுவதுமாக சாப்பிடுவது சிறந்தது, மேலும் அவற்றை மென்று சாப்பிடுவது உங்கள் பற்களுக்கும் நல்லது. கல்லீரலுக்கும் சிறந்தது,” என குறிப்பிட்டுள்ளார். நீங்கள் அவற்றை பச்சையாகவோ அல்லது ஜூஸாகவோ சாப்பிடலாம் சாப்பிடுவது கேரட்டின் சிறந்த அம்சம். “ஆனால், நீங்கள் அவற்றை ஜூஸ் செய்தால், நார்ச்சத்துள்ள ஜூசாக குடிக்க வேண்டும். அதேபோல் புற்றுநோயாளிகள் எப்பொழுதும் கரிம மற்றும் தோல் நீக்கப்பட்ட கேரட்டைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்றும், கேரட்டை சூப் செய்து சாப்பிட்டால் அதன் நன்மை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நீரிழிவு நோயாளி, ஒருவர் கேரட் சாற்றை அதிகமாக உட்கொள்ளக்கூடாது “முழு கேரட்டையும் சாப்பிடுவது சிறந்தததாக இருக்கும். அல்லது உங்கள் நிலைகள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதைப் பொறுத்து அதிகபட்சமாக ஒரு கிளாஸ் ஜூஸ் குடிக்கலாம் என்று கூறியுள்ளார்.
கேரட் ஜூஸ் செய்வது எப்படி?
கேரட் சாறு, வடிகட்டியதில்லை, சில புதிய அல்லது உலர்ந்த வோக்கோசு இது குறிப்பாக மார்பக புற்றுநோய்களுக்கு நல்லது. ஒரு துளி அல்லது இரண்டு கூடுதல் துளி ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து பீட்ரூட், வெள்ளரி, அல்லது இஞ்சி, பூண்டு, கருப்பு மிளகு சேர்த்து கட்டுங்கள்,” சாறு எடுத்து சாப்பிடலாம்.
ஆனால் எல்லாவற்றையும் போலவே, கேரட் சாற்றையும் மிதமாக உட்கொள்ள வேண்டும். கேரட் ஜூஸை அதிகமாக சாப்பிடும்போது நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் உடல்நிலைக்கு எது பொருத்தமாக இருந்தால், அதை எடுத்துக்கொள்ளலாம்., இல்லையென்றால் வேண்டாம் என்று விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“