scorecardresearch

இரவில் தூங்கும் முன்பு ஒரு துண்டு தேங்காய்: இவ்ளோ நன்மை இருக்கா?

Tamil Health Update : தேங்காயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் அதிகம் காணப்படுகின்றன.

Tamil Health Coconut Benefits : பொதுவாக கோவில்களில் வேண்டுதலுக்காக தேங்காய் உடைப்பது வழக்கம். வீடுகளில் பூஜைகளிலும், உடைக்கப்படும் தேங்காய், உணவில் சட்னி, சாம்பார் தேங்காய் சாதம் உள்ளிட்ட பல வகையில் பயன்படுகிறது. ஆனால் இந்த தேங்காயில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல வகை நன்மைகள் அடங்கியுள்ளது என்பது நம்மில் பலரும் அறிந்திடாத ஒரு விஷயம்.

இயற்கை தந்த வரப்பிரசாதங்களின் முக்கியமான ஒன்று தேங்காய். உடலில் ஆரோக்கிமான கொழுப்புகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் சிறந்த மூலமாக தேங்காய் பயன்படுகிறது. இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் பாரம்பரிய மருத்துவத்தில் தேங்காய் பயன்படுத்தப்படும் நீண்ட வரலாறும் உள்ளது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் அதிகம் காணப்படுகின்றன.

இந்த தேங்காய் எவ்வாறு ஆரோக்கிய விளைவுகளை அதிகரிக்கிறது என்றால், தினமும் தூங்கும் முன் பச்சையாக தேங்காய் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

மலச்சிக்கலைத் தடுக்கிறது

பச்சை தேங்காய் மலச்சிக்கலை தடுக்க உதவும் ஒரு இயற்கை தீர்வாகும். பச்சை தேங்காயில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது.

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது

தூங்கும் முன் பச்சையாக தேங்காய் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் உள்ள கொழுப்பு உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்தும். இதன் மூலம், தேங்காய் இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கும்.

எடையைக் கட்டுப்படுத்துகிறது

பச்சை தேங்காய் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் சிறந்த மூலமாகும், இது உங்கள் உடலில் கொழுப்பை எரிக்க உதவுகிறது.

ஆரோக்கியமான தோல்

பருக்கள் அல்லது தழும்புகள் போன்ற பல தோல் பிரச்சனைகளை தீர்க்க தேங்காய் நன்மை பயக்கும். சிறந்த பலனைப் பெற, படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பச்சையாக உட்கொள்ளவும்.

நீங்கள் நன்றாக தூங்க உதவுகிறது

இன்றைய வேகமான வாழ்க்கையின் காரணமாக, தூக்கமின்மை பிரச்சனை பொதுவானதாகிவிட்டது. தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தேங்காய்ப்பால் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health update coconut benefits for eating before sleeping