Coriander Water Benefits In Tamil : இந்தியாவில் கொத்தமல்லி இல்லாத சமையறையை நாம் காண்பது மிகவும் அரிது. உணவிற்கு சுவை சேர்ப்பதிலும், நறுமணத்தை உண்டாக்குவதிலும் கொத்தமல்லிக்கு இணை ஏதும் இல்லை என்று சொல்லாம். அதனால் தான் இதனை சமையலில் பல முறைகளில் பயன்படுத்தி வருகின்றனர். சிறிது காரத்தன்மையுடன் தனி நறுமணம் தரும் இந்த கொத்தமல்லியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இயற்கை மருத்துவத்தில் தனித்தன்மை கொண்ட கொத்தமல்லியில், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே என முக்கிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்போதுதான் கொத்தமல்லியின் அருமை பலருக்கும் தெரியவந்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய, ஆயுஷ் அமைச்சகம் கொத்தமல்லியை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் பலரும் இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். மேலும் கொத்தமல்லி நீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது.
கொத்தமல்லி நீரின் நன்மைகள் :.
கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.
கொத்தமல்லியில் மகத்தான செரிமான பண்புகள் உள்ளன, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.
கொத்தமல்லியில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது. இவை அனைத்தும் முடியின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொத்தமல்லி சிறந்தது; கொத்தமல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகின்றன.
கொத்தமல்லி நீர் முகப்பரு, நிறமி மற்றும் தழும்புகளை குறைக்கிறது: இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, மேலும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. காலையில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதால் முழுமையான ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.
கொத்தமல்லி தண்ணீர் செய்வது எப்படி
கொத்தமல்லி தண்ணீரைத் தயாரிக்க, 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை 1 கப் குடிநீரில் ஒரே இரவில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், விதைகளை வடிகட்டி, வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil